Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

Tuesday, 3 July 2018

முதன் முதலாக துபாய் மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்! நெகிழ வைக்கும் காரணம்!

முதன் முதலாக துபாய் மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்! நெகிழ வைக்கும் காரணம்!

மருத்துவமனையில் சிகிச்சைகள் நடக்கும், ஆபரேசன் நடக்கும் ஆனால் திருமணம்! அதுவும் நடந்துடுத்து!

கனடாவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில் சந்தித்துக் கொண்ட ரிபாத் என்கிற பங்களாதேஷ் மணமகனுக்கும் ஸனா என்கிற பாகிஸ்தானிய மணமகளுக்கும் எதிர்வரும் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நிக்காஹ் செய்திட சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு கனடாவின் டோரன்டோ நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் சுமார் 200 உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதியன்று ரிபாத்தின் தந்தை ஷஹாதத் சவுத்ரி என்பவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பர்துபை, அல் மன்கூல் பகுதியிலுள்ள அஸ்டர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இன்னும் செயற்கை சுவாச சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் எங்கு விமானப் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டவுடன் மணமக்கள் கனடாவிலிருந்து துபைக்கு வரவழைக்கப்பட்டு அஸ்டர் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தந்தையின் முன் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

இத்திருமணத்தின் விருந்தினர்களாக அஸ்டர் மருத்துவமனையின் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர ஊழியர்களுடன் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான உறவினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருமணத்திற்கு திட்டமிட்ட தேதியான ஜூலை 17 அன்று அதே ஹோட்டலில் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முன் திருமண வரவேற்பு நடைபெறும் என தெரிவித்ததுடன் திருமணத்திற்கு வர இயலாத நிலையிலுள்ள எங்களின் தந்தைக்காக திருமணத்தையே இங்கு கொண்டு வந்து விட்டோம் என பூரிக்கின்றார் புதுமாப்பிள்ளை ரிபாத்.

மருத்துவமனையில் நடைபெற்ற முதல் திருமணம் என்று துபை வரலாற்றில் பதிவான ஒன்றாக அமைந்துவிட்டது இந்தத் திருமணம்.

Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, 24 June 2018

போலிஸாரால் மலர் மற்றும் சாக்லட் கொடுத்து வரவேற்றப்பட்ட சவுதிப் பெண்கள் சாரதிகள் (VIDEO)

போலிஸாரால் மலர் மற்றும் சாக்லட் கொடுத்து வரவேற்றப்பட்ட சவுதிப் பெண்கள் சாரதிகள் (VIDEO)

சவூதி அரேபியாவில் இன்று முதல் பெண்கள் உத்தியோக பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளனர். அந்த வகையில் கடந்த நள்ளிரவு வாகனங்களை ஓட்டிக் கொண்டு பாதைகளில் வலம் வந்த பெண்களுக்கு மலர்ச்சொண்டு மற்றும் சாக்லட் போன்ற இனிப்புகளை கொடுத்து போக்குவரத்து போலிஸார் வரவேற்று வழங்கியு்ளளனர். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது மிக வைரலாக பரவி வருகின்றனது.

Saturday, 23 June 2018

டாய்லெட் பேப்பரில் திருமண ஆடைகள் வடிவமைக்கும் சுவாரஷ்யப் போட்டி!

டாய்லெட் பேப்பரில் திருமண ஆடைகள் வடிவமைக்கும் சுவாரஷ்யப் போட்டி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சீப் சிக் என்ற அமைப்பு ஆண்டு தோறும் டாய்லெட் பேப்பர்களை கொண்டு மணமகள் ஆடையை வடிவமைக்கும் போட்டியை நடத்தி வருகிறது. சுவாரஸ்மான இந்தப்போட்டிக்கு 1500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்இ அதில் 10 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற ஆடை வடிமைப்பாளர்கள்இ டாய்லெட் பேப்பர்இ ஒட்டும் பசைஇ குண்டூசி ஆகியவற்றை வைத்து மணமகளுக்கான ஆடைகளை நேர்த்தியாக வடிவமைத்தனர். மேனியோடு ஒட்டிக்கொண்டிருந்த இந்த ஆடைகளை அணிந்தபடி மாடல்அழகிகள் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தப்போட்டியில்இ விர்ஜிரியாவைச் சேர்ந்த க்ரூஸ் முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு 10இ000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது 14 வது டாய்லெட் பேப்பர் ஆடை வடிவமைப்பு போட்டியாகும்.

Friday, 22 June 2018

தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணைத் தேடி இலங்கை சென்ற கத்தார் குடும்பம் - (வீடியோ)

தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணைத் தேடி இலங்கை சென்ற கத்தார் குடும்பம் - (வீடியோ)

கட்டார் வாழ் இரு அரேபிய சகோதரர்கள் ( அக்கா, தம்பி ) தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணிற்கு கைம்மாறு செய்வதற்காக இலங்கைக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.
மோனிகா இலங்கை நாட்டுப் பிரஜை. தனது குடும்ப வறுமையை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வதற்காக கட்டாருக்குச் சென்றாள்.

கண்டி கடுகஸ்தோட்டையை வசிப்பிடமாகக்கொண்ட மோனிகா கட்டாரில் வசிக்கும் சவூதி நாட்டுக் குடும்பம் ஓன்றின் வீட்டில் 20 வருடங்களுக்கு மேலாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள்.
தான் வேலை செய்யும் குடும்ப அங்கத்தவர்களிடம் நம்பிக்கையை பெற்றதன் மூலம் அவரை அவர்கள் வேலைக்காரி என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் ஓருவராக அவரை கருதினார்கள்.

குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை அனைவருடனும் அவள் பண்பாக, பணிவாக நடந்துகொண்டதன் காரணமாக அவர்களும் மிக்க மரியாதையுடன் அவருக்கு அன்பை வெளிப்படித்தினார்கள்.

மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளர்களுக்கு அவர்களது எஜமானர்களால் நடக்கும் கொடுமைகள் பற்றி தினமும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பல விமர்சனங்களை அந்நாட்டவர்கள் சந்தித்தாலும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்களும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வயோதிபம், நோயின் காரணமாக வேலை செய்ய முடியாத எத்தனையோ வீட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுப்பாமல் அவர்களால் பெறப்படும் சந்தோசம் மற்றும் அனுபவங்களுக்காக மாதாந்த ஊதியங்களை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை வீடுகளில் தங்கவைத்திருப்பதை மத்திய கிழக்கில் தொழில் புரிபவர்கள் அறிவார்கள்.

அதே போன்று தொழில் புரிந்த வீடுகளில் நன்மதிப்பைப் பெற்று நாட்டில் வசிக்கும் பல தொழிலாளர்களுக்கு மாதாந்தம் பண உதவிகளை அக்குடும்பங்கள் செய்து வருவதும் ஆச்சரியமான விசயமில்லை.

அண்மைக் காலங்களாக பல வருடங்கள் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து நாடு திரும்பிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு கைம்மாறு செய்வதற்காக மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வரும் செய்திகளை அடிக்கடி அறிய முடிகின்றன.

அதே தொடரில் இரு தினங்களுக்கு முன் கட்டாரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சவூதி நாட்டைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள்.

குழந்தை பருவத்திலிருந்து வாளிப வயது வரை மோனிகா என்ற எமது சகோதர இனப் பெண், தாயைப் போன்று பராமரித்த காரணத்தினால் அவரின் சுகநலம் விசாரிப்பதற்காக சுல்தான் மற்றும் ரஸான் ஸஹ்துத்தீன் என்று அழைக்கப்படும் இரு சகோதர்களும் ஓரு வார காலத்திற்கு இலங்கைக்கு பிரயாணத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

மோனிகாவின் வீட்டை அடைந்ததும் ரஸான் அவரை ஆனந்தமாக கட்டி அணைத்துக்கொள்கிறாள்.சகோதரர்கள் இருவரும் மோனிகாவுடன் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்கள். 

வரும் 26ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர்கள் மோனிகாவின் குடும்பத்துடன் நாட்டின் சுற்றுலா தலங்களுக்குச் சென்று இலங்கையின் தனித்துவத்தை அறிந்து வருகிறார்கள்.

21/06/2018
Moulavi Faisan Hamsa ( Qatar )

Tuesday, 5 June 2018

வீடியோ இணைப்பு!  இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீடியோ இணைப்பு! இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

(TW) இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிச்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களனி பியகம பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிவதனா என்ற பெண்மணி பெருமளவு பூனைகளை வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடன் மிகவும் நெருக்கமான பூனையொன்று இந்த துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரின் உடலுக்கு அருகில் படுத்திருந்துள்ளது. தற்காலத்தில் மனிதர்கள் கூட மனிதாபிமான செயற்படாத காலத்தில், பாசமாக வளர்த்த பூனையின் செயற்பாடு பலரை கண் கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.