Showing posts with label Special Report. Show all posts
Showing posts with label Special Report. Show all posts

Saturday, 4 August 2018

கல்முனையில் ஓர் இளம் ஆசிரியரின் மரணம் - பொறுப்பு கூற வேண்டியது யார்!

கல்முனையில் ஓர் இளம் ஆசிரியரின் மரணம் - பொறுப்பு கூற வேண்டியது யார்!

மரணத்தின் பின்னனியில் அல்சர் எனும் நோய்.. ஆரம்பத்தில் குடல் புண் பின்னர் ஓட்டையாகி வாழ வேண்டிய வயதில் நேற்று இயற்கை எய்தினார். அவருடைய பாவங்களை இறைவன் மண்ணிப்பானாக..

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்வி வலய மக்களே நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இளம் ஆசிரியை அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து படபடவென ஆயத்தமாகி ஏறாவூர் பாடசாலைக்கு தினமும் சென்றுபின்னர் அங்கிருந்து 2.00 Pm புறப்பட்டு 4.00 மணிக்கு வீடு வந்து சமைப்பவராகவும் சாப்பிடுபவராகவும் இருந்தார். ஒரு நாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, 5 வருடங்கள்..

இதுதான் இவருடைய மரணத்துக்கு பின்னால் இருந்த பிரதான காரணி. காலை உணவும் பகல் உணவும் 5 வருடங்கள் நிர்ப்பந்த சூழ்நிலைக்குள்ளே....

இன்று எம்முடைய பிரதேச இளம் ஆசிரியர்கள் மட்டும் வெளிமாவட்டங்ளுக்கு கண்மூடித்தனமாக எறியப்பட்டு நிபந்தனை காலங்கள் பூர்த்தி அடைந்தும் இது போன்ற பல பிரச்சினைகளுடன் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர்.

எமது பிரதேசத்தை சேர்ந்வரே மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்தும் எறியும் நெருப்பில் பெற்றோல் ஊற்றுபவராகவே தொழிற்படுகிறார். 

ஒவ்வொரு புதன் கிழமையும் எமது ஆசிரியர்கள் இவருடைய திருகோணமலை அலுவலகத்துக்கு இவ்வாறான நோய்களோடும், குழந்தை பிரச்சனை , பொருளாதார பிரச்சினைகளோடும் முறையிட சென்றால் எதற்கும் செவிசாய்க்காத வரம்பற்ற அதிகாரத்தை கொண்ட ஹிட்லர் போன்றே பதில்களை வழங்குகிறார்.

எமது மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்குள் பரிதவிக்கும் எமது ஆசிரியர்களை பசி பட்டினி இல்லாமல் உரிய வேளைக்கு மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடுவதற்கும், நோய்
நொடியற்று வாழ்வதற்கும் இதுபோன்ற இன்னுமொரு மரணம் ஏற்படாமல் இருப்பதற்கும் உங்கள் குரல் சட்டசபை வரை ஓங்க வேண்டும். இதற்கு என்றும் நன்றியுடையவர்களாக எமது மக்கள் மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை

தோழி றிப்னாவின் மறைவில் துயருறும் அவரது கணவர், குடும்பத்தார், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
நன்றி - Mohemed Sham

Sunday, 22 July 2018

வளைகுடா நாடுகளில் இளம் வயதில் மரணமடையும் வெளிநாட்டு உறவுகள்!

வளைகுடா நாடுகளில் இளம் வயதில் மரணமடையும் வெளிநாட்டு உறவுகள்!

வளைகுடா நாடுகளில் குடும்பத்தை பிரிந்து வேலை செய்து கொண்டிருக்கின்ற சகோதரர்கள் குறைந்த வயதில் நோயினால் மரணம் அடைவது தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு சகோதரனின் மரணச் செய்தி கேள்விப்படும் பொழுது மணம் வலிக்கின்றது,

பணத்துடன் சேர்த்து பல நோய்களையும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர் நம் வளைகுடா வாழ் சகோதரர்கள். வளைகுடா நாடுகளில் இருக்கின்ற பெரும்பாலான சகோதரர்களுக்கு முடி உதிர்தல் முதல் இதய நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிட்னி அல்லது பித்தப்பைக் கல் போன்ற பல நோய்கள் சர்வ சாதாரணமாக ஏற்பட்டுவிடுகின்றது.இந்த நோய்கள் முற்றி மரணத்தில் முடிகின்றது. 

வீட்டில் சமைத்து தர பெண்கள் இல்லாததால் நம் சகோதரர்கள பெரும்பாலும் ஹோட்டல் அல்லது மெஸ்களில் தான் உணவு உண்கின்றனர். வேலைக்கு சேரும் பொழுது கிடைக்கும் குறைந்த சம்பளத்தால் யாராலும் குடும்பத்தை அங்கு எடுக்க முடியாது. ஆகவே சம்பள உயர்வு பெற சில, பல வருடங்கள் காத்திருக்கின்றனர். நல்ல சம்பளமும், குடும்ப விசாவும் கிடைத்தவுடன் தங்கள் குடும்பத்தை அங்கு அழைத்து வைத்துக் கொள்கின்றனர்

ஆனால் தனியாக இருந்த அந்த சில வருடங்களில் அவர்களுக்கு எல்லா நோய்களும் வந்துவிடுகின்றது. பின்னர் குடும்பத்தை எடுத்து நோய் முற்றாமல் பார்த்துக்கொள்கின்றனர். அவ்வளவு தான். வந்த நோய் வந்தது தான்.

இதில் பெரும்பாலான சகோதரர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்காததால் கடைசிவரை தனியாகவே இருந்துவிடுகின்றனர். தொடர் வேலை, கடும் வெப்பம், கடும் குளிர், தனிமை, மன உளைச்சல், ஹோட்டல் உணவு, சில கெட்ட பழக்கம் என்று இவர்களின் மனதையும் உடலையும் சக்கையாக பிழிந்து கந்தையாக ஊருக்கு அனுப்புகின்றது இந்த வளைகுடா.

இப்படி தப்பி பிழைத்து வரும் இந்த பாவப்பட்ட சகோதரகளின் இறுதி வாழ்க்கை பெரும்பாலும் மருத்துவமனையிலேயே கழிந்து விடுகின்றது. அடுத்ததாக நோயை உண்டாக்கும் மிகப்பெரிய காரணமாக இருப்பது அங்கு கிடைக்கக் கூடிய கடல் நீரை சுத்திகரிப்பு செய்து கிடைக்கும் "குடிநீர்"

இந்த பாட்டில் குடிநீர் நம் உடலுக்கு மிகவும் கேடு தரக்கூடியது. ஆனால் இதை அந்த பாலைவனத்தில் யாராலும் தவிர்த்து வாழவே முடியாது. கிடைப்பதை உண்டும், குடித்தும் வாழ்கின்றனர் அவ்வளவு தான்.

கச்சா எண்ணையும், பேரீத்தம் பழத்தையும், மூட்டை பூச்சியையும் தவிர எதுவுமே இல்லாத இந்த பாலைவன நாட்டில் கிடைக்கும் எல்லா உணவு வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டவைகள். வளைகுடா பிரவேசத்தால் நமது ஊரில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை தான். ஆனால் அதன் பின் விளைவு மிக கோரமானதாக உள்ளது.

நம் முன்னோர்கள் பொருள் ஈட்டச்சென்ற பர்மாவும், இலங்கையும், சிங்கப்பூரும், மலேசியாவும், ஹாங்காங்கும் இது போன்று மரணத்தையும், நோய்களையும் பரிசளிக்கவில்லை. 

இந்த நாடுகளுக்குச் சென்ற பலர் அங்கேயே குடியுரிமை பெற்று சொந்த வீட்டில் நல்ல ஆரோக்கியத்துடன் நிரந்தரமாக வாழ்கின்றனர்.

வாழ்க்கை முழுக்க அரபிக்கு உழைத்தாலும் பணத்தை தவிர அவன் நாட்டில் ஒரு அடி இடத்தையும் நம் பெயருக்கு எழுதி தரமாட்டான். எவ்வளவு பெரிய கம்பெனிக்கு நீங்கள் முதலாளியானாலும் உங்களுக்கு அரபி பெண் தரமாட்டான்.

குடியுரிமையோ, இலவச மருத்துவமோ, இலவச கல்வியோ, அரசியல் பிரதிநிதித்துவமோ உங்களுக்கு ஒரு போதும் வளைகுடாவில் கிடைக்காது. இனி வரும் நம் சந்ததிகளை எதிர்காலமில்லா, நிரந்தரமில்லா, ஆரோக்கியமில்லா வளைகுடாவிற்கு  தயார் படுத்துவதை நிறுத்திட வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கு வேண்டாம் இந்த நரக வாழ்க்கை. பணம் மட்டும் வாழ்க்கை அல்ல. 

Friday, 6 July 2018

விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? அவசியம படிக்க வேண்டிய பதிவு!

விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? அவசியம படிக்க வேண்டிய பதிவு!

ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது.

உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.

உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத்தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.

உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களின் விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது.

இந்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது.

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்காவிட்டால், எதிர்காலத்தில் அதன் விளைவு அச்சமூட்டுவதாக இருக்கும்.

ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. இது அவ்வளவு சுலபமான நடைமுறை அல்ல. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். தன்னுடைய இலக்கை எட்டும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டுமா?

இன்று முதல் இவற்றை கடைபிடித்தால் போதும்:
மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம். மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.
பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
மது அருந்துவதை நிறுத்துங்கள். மது அருந்துவதால் பாலியல் திறனுடன் நேரடியாக தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.
உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.
எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.
ஒரு ஆய்வின்படி, தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்குமட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.

Tuesday, 3 July 2018

இலங்கையிலிருந்து கத்தாருக்கு FREE VISA மூலம் வருபவர்களுக்கான முக்கியப் அறிவுறுத்தல்!

இலங்கையிலிருந்து கத்தாருக்கு FREE VISA மூலம் வருபவர்களுக்கான முக்கியப் அறிவுறுத்தல்!

“கட்டார் வந்தார் வாழ்ந்தார்” என்பது வழக்கொழிந்து, (ஃப்ரீவீசாவில்) கட்டார் வந்தார் செத்தார்” என்றாகிவிட்டது போலும், ஒருகாலத்தில், எனக்கு தெரிந்து, இங்கிலாந்தில் இருந்து கட்டாருக்கு வந்து வேலை செய்து கைநிறைய சம்பாதித்தவர்கள் ஏராளம்.

சவூதி, டுபாய் போன்ற நாடுகளோடு ஒப்பிடும் போது பின்தங்கியிருந்த ஒரு நாடான கட்டாரை, இந்தளவு முன்னோக்கி கொண்டு வந்ததன் பின்னணியில் இருப்பவர் இந்நாட்டு அமீரான தமீம் மஜீத் அவர்களின் தாயாரான ‘ஷேஹா மூஸா’ என்பதை இங்கிருப்பவர்கள் அறிவார்கள்.

Moza bint Nasser
வெறும் கட்டிடங்களையும் பெறுமதியான வாகனங்களையும் மாத்திரமே வளர்ச்சியாக பார்க்கும் மத்தியகிழக்கில், கல்வி, தொழில்நுட்பம் போன்றவை மூலமாக வளர்ச்சிப்பாதையில் இட்டுச்சென்ற பெண்மணி அவர்.

இந்த அசுர வளர்ச்சியில் பொறாமை கொண்ட சகோதர நாடுகள், பல அபாண்டங்களை சுமத்தி கட்டார் மீது பொருளாதார தடையை ஏற்படுத்தி, கட்டார் தேசத்தை முடக்க முயன்று தோற்றுப்போனதை அறிவீர்கள்.

இந்த திடீர் தடையால் முழு கட்டாரும் ஸ்தம்பித்து, பின்னர் சுதாகரித்து எழ பல மாதங்களானது.

ஈற்றில், “எலவு செய்யப்போய் கட்டாருக்கு நலவாகிப்போனது”தான் இங்கே ட்விஸ்ட்.

அன்றாடம் பருகும் பால் முதல் வர்த்தக ரீதியான துறைமுகத்தை கூட சவூதி, டுபாய் போன்ற நாடுகளில் தங்கியிருந்த கட்டார், தற்போது நூற்றுக்கணக்கான பொருட்களை சொந்த மண்ணில் தயாரித்து வருவது சவூதி, டுபாய் போன்ற நாடுகளுக்கு பெருத்த அவமானத்தையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது.

இப்படி நல்ல பல திருப்பங்களை போலவே பலமான அடியும் கட்டாருக்கு விழுந்திருப்பதை மறுக்க முடியவில்லை. குறிப்பாக உலகத்தில் எந்த மூளையிலும் காணக்கிடைக்காத கட்டுமான பணிகளை கொண்ட கத்தார் இத்தடைகளால் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது எனலாம்.

2022ல் உலக கால்பந்தாட்ட போட்டிகளை நடாத்தவிருக்கும் கட்டாருக்கு கடல் மற்றும் விமான போக்குவரத்தில், எல்லை நாடுகளான சவூதி, டுபாய் போன்ற நாடுகளின் தடையால் ஒமான், ஈரான் போன்ற நாடுகளின் ஊடாகவே பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.

இந்த ஒரு காரணத்தால் இங்கு வேலை வாய்ப்புகளில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டிருக்கிறது, போலவே இந்திய வீசா கொடுப்பதை தளர்த்தியதன் காரணமாக இந்தியர்களின் வருகை அதிகரித்துள்ளது.

எந்த கம்பெனிக்கு சென்றாலும் ஒன்று அது இந்தியருக்கு, குறிப்பாக மலையாளிகளுக்கு சொந்தமாக இருக்கும், அல்லது அங்கு உயர் பதவிகளில் மலையாளிகளே வீற்றிருப்பர். “ஒரு மலையாளி மற்றொரு மலையாளிக்கு மாத்திரமே உதவுவான்” என்பது எழுதப்படாத ஒரு விதி!

எனவே இங்கு ப்ரீ வீசாவில் வரும் அதிகமான இலங்கையர்களுக்கு வேலை கிடைப்பது முயல்கொம்பாகி விடுகிறது. மீறி வேலைவாய்ப்புகள் இருந்தாலும் Highly skilled என்ற மேல்படிப்பிற்கான உத்தியோகங்களோ அல்லது கீழ் படித்தரத்திலுள்ள க்ளீனர், ட்ரைவர் போன்ற தொழில்களே எஞ்சியுள்ளன(மிகவும் குறைந்த சம்பளத்தில்).

ப்ரீவீசாவில் வருபவர்கள் மாதக்கணக்கில் வேலையில்லாமல் இருப்பது இந்த நாட்டில் மிகக் கொடுமையான விசயம்,

வசதி குறைந்த ஒரு அறையில் ஒரு கட்டிலுக்கான வாடகை, சாப்பாட்டு செலவு என மாதத்திற்கு குறைந்தது 30,000 ரூபா தேவை, சில மாதங்கள் தொழிலின்றி இருப்பவர் நிலை?

இங்கு சிலர் பல மாதங்கள், ஏன்? வருடங்கள் என தொழிலின்றி அவதிப்படுவதை காணலாம்,

குறிப்பாக 35 வயதுக்கு அதிகமானால் அம்போ தான்!

எனவே ஒவ்வொருத்தரின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி, அவசரப்பட்டு இங்கு வர வேண்டாம், நம்பி வந்தால் கைவிரித்து விடுவார்கள்,  ( நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் இங்கே கிடைப்பதரிது, அப்படி அமைவது வரம்)

“ஒரு காலத்தில் கனவுகளை வாழ வைக்கும் ஒரு நாடாகவிருந்த கட்டார், இன்று வெறும் கானல் நீராக”

வானுயர்ந்த கட்டங்கள், விலையுயர்ந்த வாகனங்களுக்கு அருகில் ஸ்டைலா நின்னு, போட்டோ பிடித்து அனுப்புவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அந்த கட்டடங்களை விட பெரிய வலிகளை சுமந்திருப்பதை சொல்லுவார்கள்.

(முகநூல் பதிவிலிருந்து)

Tuesday, 26 June 2018

40 ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா உருவானது எப்படி?

40 ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா உருவானது எப்படி?

40 ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா உருவானது எப்படி? சீனாவில் மா சே துங் காலத்துக்கு பிறகு, பொருளாதார புரட்சி ஏற்படுத்திய புகழ் டெங் ஷியாபிங் என்பவரையே சாரும்.

1978ஆம் ஆண்டு டெங் ஷியாபிங் தொடங்கிய பொருளாதார புரட்சி 2018ஆம் ஆண்டில், 40 ஆண்டுகள் பயணித்து இன்று சீனா உலக அளவில் பெற்றிருக்கும் மகத்தான இடத்தை அடைந்திருக்கிறது. இதை, சீனாவின் இரண்டாவது புரட்சி என்று சொல்கிறார் டெங் ஷியாபிங்.

இந்த பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகே உலக அளவில் பெரிய பொருளாதார சக்தியாக வலுவுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது சீனா.

இன்றைய நிலையில் சீனாவிடம் அதிக அளவிலான அந்நிய செலாவணி இருப்பு, (3.12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) யின் அடிப்படையில் (11 டிரில்லியன் டாலர்கள்) சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய நாடாக திகழும் சீனா, நேரடி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் உலகின் மூன்றாவது பெரிய நாடு.

1978ஆம் ஆண்டில் டெங் ஷியாபிங் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு 1.8% ஆக இருந்தது. 2017ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு 18.2% ஆக உயர்ந்துவிட்டது.

சீனப் பொருளாதாரம் வளர்ந்துவரும் பொருளாதாரம் மட்டுமல்ல, தனது வலிமையான கடந்த காலத்தை நோக்கி மீண்டும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு கிட்டத்தட்ட 30 சதவீதமாக இருந்தது.

மா சே துங் மற்றும் டெங் ஷியாபிங்
சீனாவை வலுவாக மாற்றியவர்களைப் பற்றி பேசும்போது, மா சே துங், டெங் ஷியாபிங் மற்றும் தற்போதைய தலைவர் ஷி ஜின்பிங் ஆகிய மூவரின் பெயர் முதலிடங்களைப் பிடிக்கும். டெங் ஷியாபிங்கின் பொருளாதாரப் புரட்சி தொடங்கிய 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷி ஜின்பிங் போன்ற ஒரு வலுவான தலைவரின் தலைமையில் சீனா மீண்டும் முன்னோக்கி நகர்கிறது.

உற்பத்தி அடிப்படையில் சீனாவின் பொருளாதாரத்தை வலுவாக்க விரும்புகிறார் ஷி ஜின்பிங். அதற்காக அவர், டெங் ஷியாபிங்கின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார். அதன்படி, பொருளாதாரத்தை திறந்துவிடுவது, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது உட்பட பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.

சீனாவின் பொருளாதார வெற்றி மற்றும் கம்யூனிச அரசியலுக்கு இடையே மோதல் நிலவும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

சீனாவின் பொருளாதார முன்னேற்றமானது, அந்நாட்டின் கம்யூனிச அரசியலின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டது.

சீனாவின் முழு அரசியல் அதிகாரமும் ஷி ஜின்பிங்கின் கைகளுக்குள் அடங்கியுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தலைவர்கள் பொருளாதாரத்தை எந்த அளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

டெங் ஷியாபிங் மற்றும் சீன பொருளாதாரத்தின் மாற்றம்
சீனாவின் எழுச்சியின் கதை, இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சிக் கதை அல்ல. ஆனால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்த பொருளாதாரத்திலிருந்து விடுபட்டு, சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறிய பொருளாதாரப் புரட்சியின் கதை.

உலகின் பல நாடுகள் சீனாவைப் போலவே மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும், பல்வேறு கோணங்களில் இந்த விஷயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது சீனா.

உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றத்தை மேற்கொண்ட சீனா, சந்தையின் மீதான நம்பிக்கையையும் விட்டுவிடவில்லை. சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, வெளிநாட்டு முதலீடுகளை எங்கு செய்யலாம், எங்கு செய்யக்கூடாது என்பதில் கவனமாக முன்னுரிமை கொடுத்து முடிவெடுத்தது சீனா.

இதற்காக, சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று உருவாக்கப்பட்டது. தெற்கு கரையோர மாகாணங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்க்காக தேர்வு செய்யப்பட்டன.

கம்யூனிச சோசலிச அரசியல் சூழலில் வலுவான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தார் டெங் ஷியாபிங். அதன் முதல் கட்டமாக சோவியத் பொருளாதார மாதிரியின் அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைத்த அவர், பின்னர் சீனாவின் தேவைகளுக்கு ஏற்ப படிப்படியாக, சோசலிச அடிப்படையில் பொருளாதாரத்தில் நவீனமயமாக்கல் செயல்முறையை தொடங்கினார்.

'Cracking the China Kandrum: Why Conventional Economic Wisdom Is Wrong' என்ற புத்தகத்தில் சீன எழுத்தாளர் யூகோன் ஹுவாங் இவ்வாறு குறிப்பிடுகிறார், "டெங் ஷியாபிங் மாபெரும் சீர்திருத்தவாதி மட்டுமல்ல, பொறுப்பானவரும் கூட".

டெங் ஷியாபிங் தொடங்கிய சமுதாய பொருளாதார சீர்திருத்தம் உலக சரித்திரத்தில் இதற்கு முன் மேற்கொள்ளப்படவில்லை. 1978 - 2016 ஆண்டுகளுக்கு இடையில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,230% அதிகரித்தது.

இதே காலகட்டத்தில் 70 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வரப்பட்டனர். 38.5 கோடி மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக உயர்த்தப்பட்டனர்.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் 17,500 சதவிகிதம் அதிகரித்தது, 2015வது ஆண்டுவாக்கில் சீனா வெளிநாட்டு வர்த்தகத்தில் உலக அளவில் முன்னிலை பெற்றது. 1978 ஆம் ஆண்டில், ஆண்டு முழுவதிலும் செய்த வர்த்தகத்தை தற்போது இரண்டே நாட்களில் செய்கிறது சீனா.

சீன கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி) கூட்டு தலைமையின் கீழ், சீனாவில் சமூக பொருளாதார மாற்றத்துக்கான துரிதமான செயல்முறையைத் தொடங்கினார் டெங் ஷியாபிங். 1960 மற்றும் 70களில் வாங்கிய பல அடிகளுக்கு பிறகு மாவோவின் பாணியைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையையும் அவர் கடைபிடித்தார்.

சர்வதேச உறவுகள் தொடர்பாக சில கொள்கைகளை வைத்திருந்த டெங் ஷியாபிங், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளமாட்டார். சீனப் பொருளாதாரத்தை துரித கதியில் உயர்த்துவதிலேயே அவரது கவனம் முழுமையாக இருந்தது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் பேராசிரியராக இருந்த எஜ்ரா வோஜெல், டெங் ஷியாபிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவர் மாபெரும் தலைவர்களில் ஒருவர் என்றும், எந்தவிதமான சிக்கலையும் சமாளித்து, நிலைத்தன்மையை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் அவர் என்றும் கூறுகிறார்.

சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் சீன குடிமக்களிடையே பொருளாதார செழிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை பலப்படுத்தி ஆட்சியையும் வலுப்படுத்தியது.

ஷி ஜின்பிங் மற்றும் புதிய சகாப்தம்
டெங் ஷியாபிங் அடிக்கடி இரண்டு பூனை சித்தாந்தத்தை மேற்கோள் காட்டுவார். ஓடும் எலியை பூனை பிடிக்கும் வரை, பூனையின் நிறம் கருப்பா வெள்ளையா என்பது முக்கியமில்லை என்று அவர் கூறுவார்.

இதே வழியில், சீன மனோபாவத்தில் புதிய தொழில் துறை வளர்ச்சியை முன்மொழிந்தார் ஷி ஜின்பிங். 2014 ஆம் ஆண்டில் 12வது தேசிய காங்கிரசில் உரையாற்றும் போது, 'இரண்டு பறவை தத்துவம்' என்ற ஒன்றை முன்வைத்தார் அவர். கூட்டை திறந்து விட வேண்டிய அவசியம் இருக்கிறது, அந்தக்கூண்டில் வயதான, இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பறவைகளை அடைக்கவேண்டும் என்று கூறினார் ஷி ஜின்பிங்.

'சோசலிசம் மற்றும் புதிய சகாப்தத்தில் சீனாவின் பண்புகள்' என்ற தலைப்பில் தனது தத்துவத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார் ஷி ஜின்பிங். அதை தொடர்ந்து, உயர் அதிகாரிகளும், அந்நாட்டின் ஊடகங்களும் தொடர்ந்து அதை, `ஷி ஜின்பிங்கின் கோட்பாடுகள்` என்றே குறிப்பிட்டன.

இதை செயல்படுத்தினால், சீனா வெற்றியடையும் என்று அவர் கூறினார். வளர்ச்சியுடன், அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனாவின் அடுத்த தலைவர் யார்? என்பதே இப்போது சீனாவில் எழுப்பப்படும் முக்கியமான கேள்வி. கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீன நாடாளுமன்றம் (தேசிய மக்கள் காங்கிரஸ்), அதிபர் பதவிக்கான கால வரம்பை நீக்கியது.

மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க ஷி ஜின்பிங் முயல்வதாக பலரும் கூறுகின்றனர்
ஷி ஜின்பிங் கோட்பாடு, சீனாவில் சோசலிசம் பற்றிய புதிய பார்வையை அறிமுகப்படுத்தியது. இது சீனாவின் ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது சகாப்தத்தைக் குறிக்கிறது.

விளக்கமாக கூறினால், சீனாவின் முதல் தலைவரான மாவோவின் கீழ், உள்நாட்டு போரால் பிளவுபட்டு இருந்த நாடு ஒன்றுபட்டது. இரண்டாவது தலைவரான டெங் ஷியாபிங்கின் கீழ், நாடு வளமடைந்தது; இந்த புதிய சகாப்தத்தில், நாடு மேலும் அதிக ஒற்றுமை மற்றும் வளங்களை பெறுவதோடு, உள்நாட்டில் ஒழுக்கத்தையும், வெளிநாட்டில் உறுதியும் பெறவேண்டும்.

அரசாங்கத் துறைக்கு ஷி ஜின்பிங் கடிவாளம் போட்டார். உதாரணமாக, அரசாங்க நிறுவனங்களை கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி, நிர்வாகத்தின் பொறுப்பில் முழுமையாக ஒப்படைத்தார். அதேபோல், தொண்டு நிறுவனங்கள் மீதும் கிடுக்கிப்பிடி போட்டார்; பல மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனது தந்தையைப் போலவே ஷி ஜின்பிங் தாராளமாக இருப்பார் என்று பலர் நம்பினர். ஷி ஜின்பிங்கின் தந்தை ஷி சோங்ஷூன், 1978ஆம் ஆண்டு குவாங்டாங் மாகாண ஆளுநராக பதவி வகித்தார். அவர் டெங் ஷியாபிங்கின் பொருளாதாரப் புரட்சியில் பங்களித்தவர்.

2012 டிசம்பர் மாத தொடக்கத்தில், ஷி ஜின்பிங், முதல் உத்தியோகபூர்வ பயணமாக குவாங்டாங்கின் ஷென்செனுக்கு சென்றார். டெங் ஷியாபிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களில் எந்த தடையும் ஏற்படாது என்பதை இந்த பயணத்தின் மூலம் அவர் அனைவருக்கும் தெரிவிக்க முயன்றார். கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை அதை உணர்த்தியும் இருக்கிறார்.

தாராளமயமாக்கலின் எல்லை
தாராளமயமாக்கலுக்கு முழு அளவிலான திட்டத்தை சீனா தயார் செய்துவிட்டது. சீனத் தலைவர்கள் மத்திய தலைமையை வலியுறுத்தினாலும், உள்ளூர் அரசாங்கத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே ஆழமான இணக்கம் ஏற்பட்டுவிட்டது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சீனா அதிகாரம் வழங்கியிருக்கிறது. முந்தைய தலைவர்களுடன் ஒப்பிடுகையில், ஷி ஜின்பிங் பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையை வலியுறுத்துபவராக இருக்கிறார்.

2014க்கு பிறகு, சீனாவில் தனியார் முதலீடு துரித வளர்ச்சி கண்டுள்ளது. உலகம் முழுவதும் சீனாவின் வர்த்தகத்தை விரிவாக்கினார் ஷி ஜின்பிங். பெல்ட் அண்டு ரோடு திட்டம் (The Belt and Road Initiative (BRI) எனப்படும் பட்டுசாலை மற்றும் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ், ஆசியா, ஐரோப்பா, மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களை கட்டமைப்பு மற்றும் வணிக வலைப்பின்னல் மூலம் இணைக்கும் திட்டத்தை ஷி முன்னெடுத்திருக்கிறார்.

சமீபத்திய நாட்களில், சீனாவின் நோக்கங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உதாரணமாக, சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை இலங்கை செலுத்த தவறிவிட்டதால், தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைத்தது இலங்கை.

இதே போன்ற பிடியில்தான் ஜிபெளட்டி, பாகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் சீனாவிடம் சிக்கியுள்ளன. உலக வர்த்தக அமைப்பில் 2001ஆம் ஆண்டு முதல் சீனா இடம் பெற்றுள்ளது. அப்போதிலிருந்து வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக சீனா ஏழாயிரம் விதிமுறைகளை ரத்துசெய்துவிட்டது. 2011ஆம் ஆண்டில் இருந்து சீனா சராசரியாக 10 சதவிகித அளவுக்கு வரியை குறைத்து விட்டது.