Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Wednesday, 12 September 2018

12 பணிப்பெண்களுடன் மகளை படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை

12 பணிப்பெண்களுடன் மகளை படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை

ஆண்டுக்கு தலா ரூ 28 லட்சம் சம்பளத்தில் 12 பணிப்பெண்களை நியமித்து மகளை படிக்க அனுப்புகிறார் பணக்கார இந்திய தந்தை ஒருவர்.

அப்பாக்கள் எல்லா இடங்களிலும் தங்கள் மகள்களைப் பற்றிக் கூறுகிறார்கள். ஆனால் இந்திய அப்பாக்கள் மகள்கள் பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர் இந்தியாவில் இருந்தால், பெரும்பாலும் பாதுகாப்பு பற்றி. வெளிநாட்டில் இருந்தால் அவளது நல்வாழ்வு பற்றி.

இந்தியாவை சேர்ந்த பணக்கார தந்தை ஒருவர் ஸ்காட்டிஷ் மலைப்பகுதியில் பல மைல்கள் தொலைவில் இருக்கும் போது கூட அவரது மகள் 'வீட்டில்' இருப்பதை போன்று இருப்பதை உறுதி செய்வதற்காக பல கோடி செலவழித்து அதற்குறிய வேலையாட்களை தேடி வருகிறார்.

இது குறித்து தி சன் வெளியிட்டு உள்ள விளம்பர செய்தியில்;

கோடீசுவரரின் மகள் ஸ்காட்லாந்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருக்கின்றார். கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க அவருக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள் வேண்டும். ஒரு மாளிகையில் குடியிருக்கவும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என பெற்றோர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு ஆண்டு சம்பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என கூறப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.28.5 லட்சமாகும். ( இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு பல்கலைக்கழக கட்டணத்தை இதைவிடக் குறைவாகக் கொடுக்கிறார்கள்)குடும்பம் மிகவும் முறையானது, அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம்.

ஒரு சமையல்காரர், ஒரு பெண் பணிப்பெண், ஒரு பணியாளர், ஒரு ஓட்டுனர், ஒரு தோட்டக்காரர், ஒரு வீட்டு மேலாளர், மூன்று வீட்டு காவலாளிகள் மற்றும் மூன்று காலாட்பணிகள் ஆகிய பதவிகளுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஸ்காட்லாந்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் படிக்கும் பெண் வாழ ஒரு மாளிகையை வாங்கி விட்டார். ஏனெனில் அவர் தட்டுத்தடுப்பு அறைகள் மற்றும் அரங்கங்களில் வசிக்க விரும்பும் பெண் ஆவார்.
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தில் வசிப்பவர் சுமைதூக்கும் தொழிலாளி நாகராஜ் (வயது 23). இவருடைய மனைவி தமிழ் இசக்கி (21). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் இருந்தாள்.

கடந்த 9-ந் தேதி மாலை குழந்தை சிவன்யாஸ்ரீ வாயில்நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தாள். உடனே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

தாயார் கைது

இதற்கிடையில் சிவன்யாஸ்ரீயின் பாட்டி தனலட்சுமி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தமிழ் இசக்கியிடம் விசாரித்தனர்.

விசாரணையில் கணவர் எந்தநேரமும் ‘வாட்ஸ்- அப்’பில் பேசிக்கொண்டும், குறுந்தகவல்களை யாரோ ஒருவருக்கு அனுப்பிக்கொண்டும் இருந்ததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை பிளாஸ்டிக் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றதாக தமிழ் இசக்கி தெரிவித்தார். இதையடுத்து தமிழ் இசக்கியை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் இசக்கி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சந்தேகம்

தினமும் வேலைக்கு செல்லும் கணவர் நாகராஜ், இரவு தாமதமாகத்தான் வருவார். நான் போன் செய்தால் போனை எடுத்து பேச மாட்டார். மேலும் செல்போனில் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கூறும். மேலும் அவர் வேறு ஒருவருடன் ‘வாட்ஸ்-அப்’பில் தொடர்பு கொண்டு பேசுவது தெரியவந்தது.

அவருக்காக குடும்பத்தை உதறிவிட்டு வந்தேன். ஆனால் இனி நடுத்தெருவுக்கு சென்று விடுவேனோ? என்று பயம் ஏற்பட்டது. எனவே குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி முதலில் ஒரு குச்சியை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். பின்னர் குழந்தையின் வாயை பொத்தி பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றேன்.

தற்கொலை முயற்சி

பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்து கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் எனது கணவர் வந்ததால் என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியவில்லை. மர்மஆசாமி வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கி விட்டு குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்ததாக கணவரிடம் கூறினேன். அவரும் நம்பி விட்டார்.

ஆனால் எனது மாமியார் அளித்த புகாரின் பேரில் போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் குழந்தையை கொல்லவில்லை என்று மறுத்தேன். ஆனால் கணவர் மீதுள்ள சந்தேகத்தில் நான் தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.


இவ்வாறு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கணவன் இறந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!

கணவன் இறந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!

பெங்களூரில் கத்தியால் குத்தப்பட்ட கணவன், இறந்தது தெரியாமலே கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான குரு சங்கர். இவர் பெல்லந்தரில் உள்ள நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 6-ம் தேதியன்று கம்ப்யூட்டர் மையத்திற்கு பிரிண்ட் அவுட் எடுக்க சென்றுள்ளார். அங்கு கடையின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் குரு பிரசாத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர், குரு பிரசாத் தலையில் திருப்புளியல் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குரு பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

இதற்கிடையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருடைய மனைவி மமதாவிற்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மமதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மமதா மகிழ்ச்சியாக இருந்தாலும், கணவர் இறந்த செய்தியினை இன்னும் உறவினர்கள் அவருக்கு தெரியப்படுத்தவில்லை.

இந்த சம்பவமானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, 4 September 2018

சவுதியில் உயிரிழந்த தமிழர்: 2 மாதங்களாக உடலை மீட்கப் போராடும் மனைவி!

சவுதியில் உயிரிழந்த தமிழர்: 2 மாதங்களாக உடலை மீட்கப் போராடும் மனைவி!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 17-ம் தேதி விபத்தில் நாகரத்தினம் இறந்து விட்டார். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பப் பணம் கட்ட வேண்டும் என்ற கூறிவிட்டார்கள்.

இறந்துபோன நாகரத்தினத்திற்கு செல்வாணி என்ற மனைவியும், சுபாஷினி கார்த்திகை செல்வி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

வறுமையான நிலையில் வாழும் செல்வராணி, தன் கணவரின் உடலை ஊருக்குக் கொண்டுவர உதவிடும்படி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்கொடுத்தார்.

மேலும், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில் நாதனிடமும் தன் கணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர உதவிடும்படி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

Sunday, 5 August 2018

 தாய் இறந்தது கூட தெரியாமல் 2 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகள்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

தாய் இறந்தது கூட தெரியாமல் 2 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகள்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், அவர் சடலத்துடன் மகள் 2 நாட்கள் வாழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியமேரி(81). இவருடைய கணவரான தேவசகாயம் முன்பே இறந்துவிட்டதால், இரண்டு மகள்களை தனியாக கவனித்து வந்துள்ளார்.

ஒரு மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இன்னொரு மகளான செல்வியுடன் பாக்கியமேரி வசித்து வந்துள்ளார்.

செல்விக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4-ஆம் திகதி இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து வீட்டின் உள்ளே பார்த்த போது, பாக்கியமேரி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறந்து 2 நாட்கள் ஆகியும் மகள் செல்விக்கு தாய் இறந்தது தெரியவில்லை என்பதை அறிந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பாக்கியமேரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாய் இறந்தது கூடத் தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சடலத்துடன் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.