Showing posts with label Breaking News. Show all posts
Showing posts with label Breaking News. Show all posts

Sunday, 15 July 2018

இலங்கையில் இன்று (15) முதல் அமுலுக்கு வரும் புதிய உடனடி அபராத விதிப்பின் முழு விபரம்.

இலங்கையில் இன்று (15) முதல் அமுலுக்கு வரும் புதிய உடனடி அபராத விதிப்பின் முழு விபரம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine), இன்று (15) முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு, மேலும் 14 விதி மீறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட, 2017 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க திருத்தத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள, 2018 ஜனவரி 15 ஆம் திகதி 2054/09 எனும் அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, பழைய உடனடி அபராத விதிப்பு (Spot fine), 23 விதி மீறல்கள் தொடர்பில், வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், புதிய Spot fine ஆனது, 33 போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் உரிய அபராத சீட்டை வழங்குவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவரை சேவைக்கு அமர்த்துதல், ஆகிய மூன்று விதி மீறல்கள் புதிய திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதோடு, அவை நீதிமன்றில் வழக்குத் தொடருதல் அடிப்படையான குற்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அது தவிர, ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில், வாகன இலக்கத் தகடு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் வடிவம் ஆகிய இரு விதி மீறல்களும், ஒன்றாக்கப்பட்டு வாகன இலக்கத் தகடு எனும் ரூபா 1,000 Spot fine விதிக்கப்படும் புதிய விதி மீறலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்கள் ( 3 நீக்கம், 2 விதி மீறல் ஒன்றாக்கப்பட்டுள்ளது ) 19 ஆவதோடு, மேலும் 14 விதி மீறல்கள் அவற்றுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட 14 விதி மீறல்களும் அதற்கான (Spot fine) அபராதங்களும் பின் வருமாறு :

(01)
அனுமதிப்பத்திரமின்றி அவசரச் சேவை அல்லது பொதுச் சேவை வாகனங்களைச் செலுத்துதல் - ரூ. 1,000

(02)
அனுமதிப்பத்திரமின்றி விசேட செயற்பாட்டு வாகனங்களைச் செலுத்துதல் - ரூ. 1,000

(03)
அனுமதிப்பத்திரமின்றி இரசாயனப் பொருட்கள் மற்றும் தாக்குதிறன் மிக்க மூலப்பொருட்கள் கொண்ட வாகனங்களைச் செலுத்துதல் - ரூ. 1,000

(04)
500 இற்குள் உள்ளடங்கும் வாகனத்தைச் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ருக்காமை - ரூ. 1,000


(05)
சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு செல்லாமை - ரூ. 1,000

(06)
ஆலோசக அனுமதிப்பத்திரம் இன்மை - ரூ. 2,000

(07)
புகை உள்ளிட்ட போன்றவற்றை, அதிகமாக வெளிப்படுத்துவது - ரூ. 1,000

(08)
ஆசனப் பட்டி அணியாமை - ரூ. 1,000

(09)
வாகனத்திலிருந்து அதிக சத்தம் வெளிப்படுத்தல் - ரூ. 1,000

(10)
வீதி சமிக்ஞையைப் பின்பற்றாமை - ரூ. 1,000

(11)
பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லல் - ரூ. 500

(12)
லொறிகளில் அல்லது முச்சக்கர, மோட்டார், வேன்களில், கொள்ளக்கூடிய அதிகூடிய பாரத்திலும் பார்க்க அதிக பொருட்களை ஏற்றிச் செல்லல் - ரூ. 500

(13)
மோட்டார் வாகனம் தொடர்பான உத்தரவை மீறல் - ரூ. 1,000 (கண்ணாடியை மறைத்தல் -Tinted Glass, கையடக்க தொலைபேசி பாவனை உள்ளிட்டவை)

(14)
உமிழ்வுச் சான்றிதழ் (புகை பரிசோதனை) உள்ளிட்ட சான்றிதழ்களை உடன் கொண்டு செல்லாமை - ரூ. 500

அத்துடன், ஏற்கனவே உள்ள அபராத விதிப்பிற்கு அமைய, ஆகக் குறைந்த அபராதத் தொகை ரூபா. 20 ஆகவும், அதி கூடிய அபராதத் தொகை ரூபா 5,000 ஆகவும் காணப்பட்டது.

இன்று (15) முதல் அமுலாகும் Spot fine அபராத விதிப்பில், மிகக் குறைந்த அபராதத் தொகை ரூபா 500 ஆகவும், அதி கூடிய அபராதத் தொகையான ரூபா 3,000 அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துவது தொடர்பிலான விதி மீறல் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அபராதத் தொகையைச் செலுத்த, அபராத சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்பதோடு, அதற்கு மேலதிகமாக வழங்கப்படும் மேலதிக 14 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்தப்படும்போது, குறித்த அபராதத் தொகையை இரட்டிப்பாகச் செலுத்த வேண்டும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த அபராதத் தொகையை, நாடு முழுவதிலுமுள்ள ஏதாவதொரு அஞ்சல் அலுவலகங்களிலோ அல்லது பிரதேச செயலகங்களிலோ செலுத்தலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Saturday, 14 July 2018

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு! வதந்திகளை நம்பாதீ்கள்

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு! வதந்திகளை நம்பாதீ்கள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உள்நாட்டு, வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச ஊடகமொன்றுக்கு குறித்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு விநியோகத்தில் தடையுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் கடவுச்சீட்டுக்கள் விநியோகத்தின் ஒருநாள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்றே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Wednesday, 27 June 2018

சவுதியிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞர் வீடு போய் சேர முன்னர் விபத்தில் பலயான சோகம்!

சவுதியிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞர் வீடு போய் சேர முன்னர் விபத்தில் பலயான சோகம்!

சவூதி அரேபியாவிலிருந்து  விடுமுறைக்காக தாயகம் திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த இரவு தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவூதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக காத்தான்குடி ஊடாக அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் தம்புள்ளை அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்த நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் புறப்படத்தயாராகி சாரதி வண்டியை பின்னோக்கிச் செலுத்தியுள்ளார்.

இதன்போது அவசரமாக வண்டியில் ஏற முற்பட்ட குறித்த இளைஞர் வண்டிக்கும் அங்கிருந்த மரம் ஒன்றுக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சவூதியில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் வீடு சேரமுன்னர் உயிரிழந்த சம்பவம் பேருந்தில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Thursday, 14 June 2018

BREAKING NEWS:- ஞானசார தேரோவிற்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது

BREAKING NEWS:- ஞானசார தேரோவிற்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது

காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பொதுபலசேனாவின் பிரதானி ஞானசாரா தேரோவிற்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூபா 50000 நஷ்ட ஈடாக வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.


-அல்மசூறா நியூஸ் / மடவளை நியுஸ்

Sunday, 10 June 2018

சவூதிக் கூட்டணி நாடுகளின் மருந்துப் பொருட்களை நீக்க கத்தார் அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

சவூதிக் கூட்டணி நாடுகளின் மருந்துப் பொருட்களை நீக்க கத்தார் அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

கத்தார் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கத்தாரில் உள்ள அனைத்து மருந்து விற்பனை நிலையங்களும், பாமசிகளும், சவூதிக் கூட்டணி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துப் பொருட்களையும், நீக்குமாறு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இவ்வாறு நீக்கப்பட்ட பொருட்களை மீள அவர்களிடமே ஒப்படைக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கமைய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கத்தாரில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளும் பரிசோதனை செய்வார்கள் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுபோல கடந்த 26ம் திகதி சவூதிக் கூட்டணி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அணைத்து பொருட்களை நீக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கு மாற்றீடான பொருட்கள் ஏற்கனவே சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என்பதாக மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.