Monday, 7 October 2019

குவைத் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது; முக்கியமாக 4 காரணங்களுக்காக உடனடியாக வெளிநாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள்:

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, Al-Qabas பத்திரிகை வெளியாகியுள்ள செய்தியில் குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புள்ளிகள் முறையை பாகுபாடின்றி அமைச்சகம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் என்றும், அதிகபட்ச எண்ணிக்கையிலான புள்ளிகள் பெறும் நபர்கள் மற்றும் சில கடுமையாக போக்குவரத்து ஈடுபடும் விதிமீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக பின்வரும் 4 தவறுகளை செய்து வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்று உடனடியாக நாடுகடத்தப் படுவார்கள். திரும்ப குவைத் வர முடியாது

1)ஆல்கஹால்(சாராயம்) அருந்ததிவிட்டு வாகனம் ஓட்டுதல்.

2) உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்.

3) சிவப்பு போக்குவரத்து விளக்கு சிக்னல் மீறுதல்.

4) அதி வேகமாக வாகனங்களை ஓட்டுதல்.

குவைத் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 14 அம்சங்கள் கொண்ட அட்டவணை பின்வருமாறு:

அதன்படி,

முதல் முறையாக மீறுபவர்களுக்கு 1 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் திரும்பப் பெறுதல்; 12 புள்ளிகள் 

இரண்டாவது முறை மீறல், ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்கள் திரும்பப் பெறுதல்; 10 புள்ளிகள்

மூன்றாவது முறையாக மீறல், ஓட்டுநர் உரிமத்தை 9 மாதங்கள் திரும்பப் பெறுதல்; 8 புள்ளிகள்

நான்காவது முறையாக மீறுபவர்களுக்கு ஓட்டுநர் அனுமதி ஒரு வருடம் திரும்பப் பெறுதல்; 6 புள்ளிகள்

ஐந்தாவது முறையாக மீறுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக திரும்பப் பெறுதல்.

ஆனால் முக்கியமாக ஓட்டுநர் உரிமம் தொடர்பில்லாத விதிமீறல் மற்றும் கடைசி மீறலின் இருந்து ஒரு வருடத்திற்குள் மீண்டும் வேறு எந்தவொரு போக்குவரத்து விதிமீறல் பதிவாகவில்லை என்றால் மேல் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகள் தானாக அழிந்து விடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவப்பு விளக்கு எரியும் போது சிக்னலில் வாகனத்தை இயக்கினால் ,4 புள்ளிகள்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக வாகனத்தை இயக்கினால், நான்கு புள்ளிகள்.

நெடுஞ்சாலைகள் மற்றும் துவார் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டினால் , 4 புள்ளிகள்.

இலகுரக ஓட்டுநர் உரிமத்தை வைத்து கொண்டு ஒரு கனரக வாகனத்தை ஓட்டினால்,3 புள்ளிகள்.

முன்பு இடைநிறுத்தப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் ; 3 புள்ளிகள்.

பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல், 3 புள்ளிகள்.

வாகனத்திற்குள் ஒரு தவறான நடத்தை செய்வது அல்லது அதை நடக்க அனுமதிப்பது,4 புள்ளிகள்.

உரிமம் பெறாத வாகனம் ஓட்டுதல், 3 புள்ளிகள்.

நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 3 புள்ளிகள்.

போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட ஒரு நம்பர் பிளேட் எண்கள் ஓரளவு அல்லது முழுமையாக மாற்றப்பட்டதால், அல்லது போக்குவரத்து துறையால் வழங்கப்படாத நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வாகனத்தை இயக்கினால் 3 புள்ளிகள்.

வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், கற்றல் உரிமம், போன்றவற்றை பெறுவதற்காக சில ஆவணங்களை சட்டவிரோதமாகப் தவறான தகவல்களை வழங்கினால்,3 புள்ளிகள்.

பயணிகளை கொண்டு செல்ல தனியார் காரைப் பயன்படுத்துதல், 3 புள்ளிகள்.

போக்குவரத்து இடையூறாக அல்லது தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைத்தால், 2 புள்ளிகள்.

சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல், 2 புள்ளிகள்.

வாகன உரிமையாளர் தனது காரை உரிய ஓட்டுநர் அல்லது உரிமம் இல்லாத ஓட்டுநரால் இயக்க அனுமதித்தால், 2 புள்ளிகள்.

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்கள் தெளிவான முறையில் இல்லாமல் அல்லது படிக்க முடியாதவையாக இருந்தால், 2 புள்ளிகள்.

ஒரே ஒரு நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுதல்; நம்பர் பிளேட்டில் நிறம் மற்றும் வடிவம் மாறியிருப்பது , நம்பர் பிளேட் காரின் தவறான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், 1 புள்ளிகள்.

உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், காலாவதியான ஆவணங்கள் கொண்டு வாகனங்களை ஓட்டுவதல் 1 புள்ளிகள்.

வாகன உரிமம் அல்லது ஓட்டுநர் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறையினருக்குக் காட்ட மறுப்பது, 1 புள்ளிகள்.

போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சரக்குகளை ஏற்றிச் செல்லுதல், 1 புள்ளிகள்.

வாகனங்களின் நீளம், அகலம், உயரம் மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டு பொருட்களை ஏற்றிச்செல்லாமல் அதற்கு அதிகமாக கொண்டு செல்வது, 1 புள்ளிகள்.

வாகனங்களில் அதிக அளவில் சப்தத்துடன் கூடிய குழப்பமான ஒலிகளைக் கொண்டு வாகனம் ஓட்டுதல், 1 புள்ளிகள்.

அதில் அளவில் புகை வெளியைறும்‘’ வாகனத்தை ஓட்டுதல், 1 புள்ளிகள்.

நெடுஞ்சாலையில் ஏற்றிச் செல்ல கூடாத ஆபத்தான பொருட்களுடன் வாகனம் ஓட்டுவது 1 புள்ளிகள்.

பழுதடைந்த வாகனம் அல்லது குறைபாடுள்ள டயர்களுடன் வாகனங்களை ஓட்டுவது, 1 புள்ளிகள்.

வாகனங்களில் சிக்கல் விளக்குகள் இன்றி முறையற்ற வகையில் வாகனங்களை இயக்குவது, 1 புள்ளிகள்.


இவ்வாறான அந்த பட்டியில் நீண்டுகொண்டே செல்கிறது.
(Kuwait Tamil Pasanga)

Author: verified_user

0 comments: