Wednesday, 9 October 2019

கத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்

கத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அதாவது trucks, tractors, trailers and semi-trailers போன்ற கனரக வாகனங்களுக்கென பிரத்தியேக நிறுத்துமிடங்கள் அமைக்க கத்தார் உள்துறை அமைச்சினால் அமைக்கப்பட முன்மொழியப்பட்ட சட்ட மூலத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இது போன்ற கனரக வாகனங்களுக்கான பிரத்தியேக நிறுத்துமிடங்களின் மூலம் பொது வீதிகளில் நிறுத்துதல், திறந்த வெளிகளில் நிறுத்துதல், ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் அளிக்கும் வகையில் தரித்து நிற்றல் போன்றவை இல்லாமல் ஆக்கப்படும் என்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Author: verified_user

0 comments: