Saturday, 5 October 2019

உலக தடகள செம்பியன்ஷிப் உயரம் பாய்தலில் கத்தாரின் பாஷிம் தங்கம் வென்று அசத்தல்!

கத்தாரில் தற்போது நடைபெற்று வரும் உலக தடகள செம்பியன்ஷிப் உயரம் பாய்தலில்க் கத்தாரின் பாஷிம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். கடந்த 04.10.2019 அன்று நடைபெற்ற உயரம் பாய்தல் இறுதிப் போட்டியில் 2.37 மீற்றர் உயரம் பாய்ந்தே இந்த வெற்றியை 28 வயதான Mutaz Essa Barshim அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். 

மேற்படி தங்கம் வென்று கத்தாருக்கு பெருமை சேர்த்துள்ள பாஷிமை கத்தாரின் அதிபர் தமீம் பின் ஹமத் அவர்கள் நேரடியாக சென்று பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







Author: verified_user

0 comments: