Thursday, 3 October 2019

உற்பத்தியில் ஈடுபடும் தொழிசாலைகளுக்கு வாடகை விலக்கழிக்க கத்தார் அரசு நடவடிக்கை!

கத்தாரில் நாட்டில் உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளுக்கான 2019ம் ஆண்டுக்கான வாடகையை தள்ளுபடி செய்ய கத்தார் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கத்தாரின் பிரதம மந்திரியும் உள்துறை அமைச்சருமான அப்துல்லா பின் கலீபா அல் தானி அவர்கள் இதற்கான முடிவை எடுத்திருப்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தார் SME வலயம், மற்றும் Mesaieed கைத்தொழில் வலயம் போன்றவற்றில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளுக்கே இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. 


இந்த முடிவானது உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கவும், தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், கத்தாரின் பொருளாதார அபிவிருத்தி வித்திடவுமாகும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கைத்தொழில் வலயங்களில் உற்பத்திகளில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் மிகுந்த பயனைப் பெறும் என்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Author: verified_user

0 comments: