Friday, 18 October 2019

பேசி வைத்தவன் - கல்யாணம் பேசி வைத்துள்ள பெண்களுக்க்கான எச்சரிக்கைப் பதிவு!


கல்யாண கனவு கலைந்து அவளது அந்த வீடே அழுது கொண்டு இருந்தது, அதே நேரம் அவனது வீட்டில் வாக்குவாதம் முத்தி அவனது கன்னத்தில் போட்ட அறையில் வாய் வெடித்து இரத்தம் கொட்டியது.மிஷ்ரா வயது 19, கிராமத்து பேரழகி, சென்ற வருடம் எடுத்த கல்யாண குரூப் போட்டோ ஒன்றில் இவளைக் கண்டு கொண்ட நியாத் ( 22 )இற்கு இவள் மீது ஒரு கண் விழ, அவனது ஊரை விட்டும் மிக தூரத்தில் உள்ள அவளை,அவனது குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து பெண் பார்க்க சென்றான், அவள் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். அவளுக்கு டவுன் மாப்பிள்ளை வரம் என்றதும், அவர்களும் சம்மதித்து இன்னும் இரண்டு வருடத்தில் கல்யாணம் செய்வதாக முடிவு செய்து விட்டனர்.அங்கிருந்து அவர்கள் செல்லும் போது நியாத் இன் தாய் "சிறுசுகள் தானே, பாவம் எங்கட மகன் ஒரு மாசத்துக்கு ஒருக்க புள்ளய வந்து பார்த்து விட்டு போகட்டுமே" என்று கூற, அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டனர்,கல்யாண கணவுகளோடு இருந்த அவளுக்கு ஒரு மாதத்தில் வருவதாக கூறி இருந்தவன் 10 நாட்களுக்குள் போன் ஒன்றையும் இன்னும் பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு அந்த வீட்டிற்கு வந்தான்.அந்த குடும்பமே மருமகனின் பொருட்களில் அசந்து போக, சில மணி நேரம் அவளுடன் கதைத்து விட்டு சென்று விட்டான்.அன்றில் இருந்து போன் மூலம் மணிக்கணக்கு குடும்பம் நடத்த தொடங்கினார்கள் அவர்கள்,இப்படி இரண்டு மாதங்கள் சென்ற பின்னர், மாதம் ஒரு முறை வருவதாகக் கூறியவன் மாதம் இரண்டு மூன்று தடவை என வரத் தொடங்கி விட்டான்.வரும் போது எல்லாம் பொருட்களை அள்ளிக் கொண்டு வந்தவன் "நான் அடிக்கடி வருவதை வீட்டில் கூற வேண்டம், எனக்கு ஏண்ட பொண்டாட்டிய பார்க்கமல் இருக்க முடியல அது தான்.." என்று கதை அளக்க,அதற்கு மிஷ்ரா வின் தகப்பன் கொஞ்சம் குழப்பத்தை போட, அவர் வியாபாரத்தில் செல்லும் வீட்டில் இல்லாத நாட்களில் வந்து போவதற்கு தொடங்கினான் இவன்.அதுவும் கிட்டத்தட்ட 184 கிலோ மீட்டர் 3 பஸ்கள் மாறியே இவளை பார்க்க வருவான்.முன்னர் வீட்டு ஹோலில் கதைக்கத் தொடங்கியவர்கள் படிப்படியாக ரூம் இற்குள் சென்று கதவை திறந்து கேர்ட்டனை போட்டுக் கொண்டு பக்கத்தில் அவளது சகோதரியின் 2வயது மகளை 😀 துனைக்கு வைத்துக் கொண்டு கதைக்கத் தொடங்கினார்கள்.சிறிது நாட்களில் அறை கதவை லொக் செய்து கொண்டு இருக்கத் தொடங்கி விட்டனர்,அறைக்குள் போனவன் சும்மா இருப்பானா, இஷ்ட்டத்திற்கு பட்டபகலில் அவளது தாயோ, மூத்த சகோதரி யோ எதனையும் கூற மாடார்கள் என்ற தைரியத்தில்,குடும்பத்தின் ஆதரவுடன் தனது வேலையை போகும் நாட்களில் எல்லாம் கிட்டத்தட்ட 8-9 மாதங்கள் முடித்துத் தீர்த்துக் கொண்டான். அப்போது அவளது வயது 18, அவனது வயது 21அப்படி அவன் வந்து போகும் போது மூத்த சகோதரி இவர்களை நோக்கி இரட்டை வசன ஜோக்கள் வேறு அடித்துக் கொள்வாள்,இது இப்படி போக, இரண்டு மூன்று தடவை மூத்த சகோதரியின் ஆதரவுடன் அவன் அந்த வீட்டில் திருட்டுத்தனமாக இரவில் வேறு வந்து தங்கிச் சென்றும் உள்ளான்.

______________________________


அப்படியே காலம் செல்ல
ஊருக்குள் அடிக்கடி இவர்களை பற்றி தேவை அற்ற கதைகள் வரத் தொடங்க, சீக்கிரம் கல்யாணத்தை எடுப்போம் என்று கல்யாண பேச்சை மிஷ்ராவின் குடும்பத்தினர் எடுக்கும் போது, நியாத் கொஞ்சம் பின் வாங்கத் தொடங்கி, கடைசியில் " எனக்கு இவள் வேண்டாம், அப்படி இப்படி" என  இவளது குறைகளையும், தூரத்தையும் இவளை ஒதுக்க ஆயுதமாக எடுத்துக் கொண்டாலும், பேசி வைத்த பொண்டாட்டி என்ற பெயரில் தீர்க்க வேண்டிய கா*ம் முழுதையும் அவள் மீது தீர்த்துக் கொண்ட பின் , இவனுக்கு அவள் சலித்துவிட்டாள், என்பதே உண்மையாகும். தனது நிலையை சொல்ல முடியாமல் அவளும், அவளது தாயும் சகோதரியும் தாம் பார்த்த மாமி வேலையை கூறிக் கொள்ள முடியாமலும் வாய் அடைத்து போய் இருந்தனர்.

___________________________


கல்யாணம் முடித்தவனையே நம்ப முடியாத இந்தக் காலத்தில் கல்யாணம் பேசி வைத்தவன் என்று கூறிக் கொண்டு அவனுடன், ஊர் சுற்றித் திரிகின்றனர் பல பெண்கள், இன்னும் சிலர் போன் ,வாட்ஸ் அப் என்று குடும்பம் நடத்தித் திரிகின்றனர்,இன்னும் ஒரு சில இடங்களில் இப்படி வீடு வரை அழைத்து குடும்பம் நடத்த உதவுகின்றனர், ₹ இந்த தைரியம் உமக்கு எங்கு இருந்து வருகிறது?₹ எந்த நம்பிக்கையில் இந்த கூத்தை செய்கின்றீர்கள்?₹ அவன் உம்மை விட்டுச் சென்றாலோ, வேறு எதாவது ஒரு காரணத்தால் இந்தக் கல்யாணம் நின்று போனாலோ என்ன செய்வீர்கள்?அது எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விடயம்,
வெளிப்படையாக கூறுவதாயின் இது தான் பல இடங்களில் நடக்கும் உண்மையும் கூட, கல்யாணம் முடித்த பின் பார்க்க வேண்டிய அழகை, அதற்கு முன்னரே போனிலும், நேரிலும் பார்த்து, பார்த்து சழித்து போய், அல்லது வெளித் தோற்றத்தை வைத்து அவன் கற்பனை செய்ததை போல், இங்கு இல்லை என்பதை கல்யாணத்திற்கு முன் தெரிந்து கொண்டு, கிடைத்தவரை பார்த்தோ, அனுபவித்தோ முடிந்த பின் ஆயிரம் பொய் கதைகள் கூறி, இவள் வேண்டாம் என்று கழட்டி விட்டு இன்னும் ஒருத்தியை தேடி சென்று விடுவார்கள்._____________________இதனையும் தாண்டி அவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், பொதுவாக கல்யாணம் என்பது இவர்களுக்குள் ஒரு சடங்காக மட்டுமே இருக்குமே அல்லாமல், கல்யாணத்தின் பின்னர் வாழ்க்கையை ஆரம்பித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய புது அனுபவம் மூலம் வரும் பினைப்பும் , அன்பும் கூட பல சமயம் இங்கு வராது காரணம் அவற்றை எல்லாம் திருட்டுத்தனமாக ஊருக்கு தெரியாமல் அறையும் குறையுமாக அனுபவித்து முடித்து இருப்பார்கள்.இதே விடயத்தை முறைப்படி கல்யாணத்தின் பின் புதிதாக முதல் தடவையாக கண்டு, அனுபவிக்கும் போது சில குறைகள் இருந்தாலும் விளங்காது, என் மனைவி ஆகி விட்டாளே என்ற பிணைப்பு அவனது 100%எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது போனாலும், ஒரு வித திருப்தியை உருவாக்கும், அதன் பின்னர் பிள்ளை என்று ஆகும் போது அனைத்துமே மாறி வாழ்வு ஒரு நேர் கோட்டில் இறைவன் நாட்டப்படி செல்லும்.அதை விட்டு விட்டு இப்படி வேலி பாய்ந்து திரிந்தால் ஒன்றில் கல்யாணம் நடக்க முன்னரே அது உடைபடும், அல்லது  கல்யணத்தின் பின்பு ஒரு வித இடைவெளி மிக்க வாழ்கையே வாழ்வாக அமையும்.என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!இது எதனையும் தாங்க முடியாத மிஷ்ரா அவள் மாமிக்கு கோல் செய்து மகன் அடிக்கடி வீட்டிற்கு வந்து எல்லை மீறி விட்டு இப்படி செய்கிறார் என்பதை அழுது அழுது கூற, எதோ நல்ல மனம் படைத்த அந்த பெண் தானும் இதற்கு காரணம் என்பதை உணர்ந்து தன் மகனிடம் அழகிய விதத்தில் கதைத்து பார்த்தார்,எதுவும் நடக்கவில்லை, அடுத்தபடி கண்ணத்தில் இரண்டை விட்டு நிறைய ஆலோசனைகளை கூறி கல்யாணத்தை முடிடா என்று கூற, அதற்கும் அவன் மசியவில்லை கல்யாணம் முடித்து விடு பட்டு இருந்தால் சரி வேறு கதை, ஆனால் இங்கு கல்யாணமும் நடக்கவில்லை, மகரும் இல்லை, மானமும் இல்லை கற்பும் இல்லை, எவனோ ஒருவனுடம் குடும்ப ஆதரவுடன் விபச்சாரம் செய்தது தான் மிச்சம்,மார்க்க அனுமதிகளின் படி இப்படி எல்லை மீறவும்,நம்பிக்கையில் தானே அப்படி செய்தேன் என்று கூறவும் இடம் உண்டா என்பதை நீங்கள் யோசித்துக் கொள்ளவும்.இன்று அவளுக்கு வயது 24 இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு தேடி வரும் மாப்பிள்ளை களுக்கு எல்லாம் ஊரில்.எவனாவது ஒருவன் தகவல் கொடுத்து அதனை நிறுத்தி விடுவான். அவன் இன்னும் ஒருத்தியை முடித்து 2பிள்ளைகளுடன் ஜாலியாக வழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
.
அவளது வாழ்வு???????பேசி வைத்தவன் என்று கூறிக் கொண்டு ஆட்டம் காட்டிய பலரது வாழ்க்கை கேள்விக் குறி ஆகி உள்ளது என்பதை மனதில் வைத்து, கல்யாணம் பேசி வைக்கிறோம் என்று காலத்தை இழுத்தடிக்காது
முறைப்படி கல்யாணத்தை செய்து கொடுங்கள்copy, paste பண்ணப்படாத இஸ்லாமிய, சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை அனைவருக்கும் பகிர்ந்து நன்மைகள் அடைந்திட இன்றே எமது இந்த பேஜ் இனை Like செய்து எம் ஆக்கங்களை்,Share செய்யவும்.


Author: verified_user

0 comments: