Tuesday, 8 October 2019

காணாமல் போன கம்பளை ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்..!

கடந்த 1ஆம் திகதி கம்பளை பிரதேசத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆசிரியரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பளை பிரதேசத்தில் வசித்து வந்த 27 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சடலம் தற்போது கம்பளை அடிப்படை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாதுஓய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Author: verified_user

0 comments: