Wednesday, 2 October 2019

கத்தார் AL Dafna பகுதியில் புதிய WOQOD பெற்றோல் நிலையம் திறப்பு!

கத்தாரின் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் எரி பொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் Al Dafna பகுதியில் WOQOD யின் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

4200 சதுர மீற்றர்கள் பரப்பளவில் 3 வரிசை அமைப்பில் 9 பெற்றோல் நிரப்பும் இயந்திரங்கள் சகிதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பற்றி WOQOD முகாமைத்துவ பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது கத்தாரில் வாகனங்களது அதிகரிப்பு ஏற்ப நாம் எரிபொரும் நிரப்பும் நிலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து  வருகின்றோம். எமது வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவது தான் எமது நோக்கம் என்றார்.

தற்போது கத்தாரில் 89 WOQOD  எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் 22 புதிய நிரப்பு நிலையங்களுக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: