Monday, 16 September 2019

பெரும் பதட்டங்களுக்கு மத்தியில் மற்றொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஈரான்!

சவூதி அரேபிய எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், 'எரிபொருள் கடத்தலுக்காக' ஹார்முஸ் பகுதியில் மற்றொரு என்னை கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் கிரேட்டர் டன்ப் தீவுக்கு அருகே இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படையினர், 250,000 லிட்டர் டீசல் எரிபொருளுடன் சென்றுகொண்டிருந்த கப்பலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த கப்பல் பந்தர் லெங்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி சென்றுகொண்டிருந்ததாக பிரிகேடியர் ஜெனரல் அலி ஓஸ்மாய் கூறியுள்ளார். மேலும், கப்பலில் இருந்த 11 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் கடத்தல் என்று சந்தேகிக்கப்படும் ஒரு கப்பல் தடுத்து வைக்கப்பட்டு, அதன் 12 பிலிப்பைன்ஸ் குழு உறுப்பினர்கள் செப்டம்பர் 7 ஆம் திகதி ஹார்முஸ் ஜலசந்தியில் கைது செய்யப்பட்ட பின்னர், இந்த மாதத்தில் நடைபெறும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

தெஹ்ரானின் நீண்டகால பிராந்திய எதிரியான சவுதி அரேபியாவில் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது வார இறுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் சர்வதேச அளவில் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

Author: verified_user

0 comments: