Saturday, 7 September 2019

சவுதியில் இன்னல்களை அனுபவித்து 12 வருடங்களின் நாடு திரும்பியை பணிப்பெண்!

சவுதி அரேபியாவுக்கு சென்ற பெண்ணொருவர் 12 வருடங்களாக வீடு ஒன்றில் சிறை வைக்கப்பட்ட நிலையில் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறையை சேர்ந்த 59 வயதான பத்மசீலி வித்தானகே என்ற பெண்மணி மீட்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு வீட்டுப்பணிப்பெண்ணாக சவுதி சென்றுள்ளார். அன்று முதல் கடந்த 12 ஆண்டுகளாக அவரை சிறை வைத்த வீட்டு உரிமையாளர் பலவந்தமாக சேவை பெற்றுள்ளார்.

பின்னர் இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கமைய சவுதி தூதரக அதிகாரிகளால் குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.

சட்டரீதியான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நேற்று அவர் நாடு திரும்பியுள்ளார்.

மீண்டும் ஒரு போதும் தான் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கவில்லை என அவர் நாடு திரும்பியவுடன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: