Friday, 9 August 2019

கத்தாரில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு! இன்றைய விலை விபரம் இதோ!

கத்தார் சந்தையில் தங்கத்தின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்த வகையில் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றை தினம் (09.08.2019) 22 கரட் தங்கம் ஒரு கிராம் 174.00 கத்தார் றியால்களாக விற்கப்படுகின்றன. என்றாலும் கடந்த ஜுலை மாதம் இதே திகதியில் 160 - 163 றியால்கள் வரைத் தான் விற்கப்பட்டன. ஆனால் ஒரு மாதத்தில் 10 றியால்களுக்கு மேல் ஒரு கிராமுக்கான விலை அதிகரிப்பு உண்மையில் அபரீமிதமாகும்.  சந்தைப் விலையைப் பார்க்கும் போது எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலையான மேலும் அதிகரிக்கும் என்பதாகவே தெரிகின்றது.

குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 174.00 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (174.00 + செய்கூலி(Making Charge)) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.

Author: verified_user

0 comments: