Wednesday, 7 August 2019

கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றி அறிவிக்கப்பட்டன

எதிர்வரும் 11ம் திகதி கத்தாரில் கொண்டாடப்படவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளை விடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது கத்தார் அரசாங்கம். அந்த வகையில் அமைச்சகங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் போன்றவை 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பொதுவான விடுமுறைநாட்கள் என்பதால் அமைச்சகங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் போன்றவை எதிர்வரும் 18ம் திகதி வழமையான பணிகளுக்கு திரும்பும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கத்தாரில் உள்ள நிதி நிறுவனங்களின் பணி நேரங்கள் கத்தார் மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் என்பதாவும், விடுமுறை தினங்கள் பற்றி வங்கியே இறுதி முடிவை எடுக்கும் என்பதாகவும் மேற்படி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Author: verified_user

0 comments: