Monday, 5 August 2019

கத்தார் ஹமத் விமான நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

கத்தார் ஹமத் விமான நிலையம் ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பெருநாள் தினத்தை கொண்டாட அதிகளவு வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்புவதனால் ஏற்படும் நெரிசலை விமான நிலையத்தில் குறைக்க பயணிகள் தங்களது விமான சீட்டுக்களை ஆன்லைன்யில் செக்கிங் செய்து கொள்ளும் படியும், விமான நிலையத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னார் சமூகம் தரும் படியும், பதிவு செய்தவர்கள், E-GATE வசதியை பயன்படுத்திக் கொள்ளும் படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் நெரிசலை தவிக்க முடிவதுடன், வீணான பயண அசௌகரியங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரயாணிகள், தங்களது பயணப்பொதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவந்து பாதுகாப்பு சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டால் பயண தாமதம் ஏற்படுவதோடு சிலநேரம் பிரயாணத் தடைகளை கூட ஏற்பட வாய்ப்புண்டு என்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: