Saturday, 10 August 2019

கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டன!

கத்தாரில் நாளைக் 11ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் பெருநாள் தொழுகையானது சூரியன் உதித்து 15 நிமிடங்களின் பின்னா் 5.20 மணிக்கு நடைபெறும் என்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது. 

பெருநாள் தொழுகைக்காக கத்தார் முழுவதும் 388 இடங்கள் பெருநாள் தொழுகைகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பெண்களுக்கு 67 இடங்களில் பெருநாள் தொழுகைகள் நடாத்தப்படும் என்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: