Thursday, 1 August 2019

முஸ்லிம் பாடசாலை ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நீடிக்கப்பட்டது.

முஸ்லிம் பாடசாலை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும்  விடுமுறை ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை நாள் நிறைவுடன் 10 திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது .

முஸ்லிம் மக்களுடைய ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் விடுமுறை ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை நாள் நிறைவுடன் 10 திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் விடுமுறையைத் தொடர்ந்து மேலும் அவ்வாரத்தில் காணப்படும் வியாழன் மற்றும் வெள்ளி 15, 16 ஆம் திகதி ஆகிய இருநாட்களிலும் முஸ்லிம் பாடசலைக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கடிதம் ஒன்றை அனுப்பியதற்கு இணங்க விசேடமாக கல்வி அமைச்சு இருநாள் விடுமுறையை நீடிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சினால் கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடித்திற்கு இணங்க கல்வி அமைச்சர் உடன் நடவடிக்கை எடுத்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறு தெரிவி;க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் விடுமுறையைத் தொடர்ந்து மேலும் அவ்வாரத்தில் காணப்படும் வியாழன் மற்றும் வெள்ளி 15, 16 ஆம் திகதி ஆகிய இருநாட்களிலும் முஸ்லிம் பாடசலைக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததுக்கு இணங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இரு நாள் விடுமுறையை நீடிக்க உடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஓகஸ்ட் 12 ஆம் திகதி முஸ்லிம் மக்களுடைய விசேட ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு அரசாங்கப் பாடசாலை 13 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்படயிருந்தது. மறு நாள் 14 திகதி போயா விடுமுறை தினத்தை தொடர்ந்து மீண்டும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வியாழன் , வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பாடசாலை நடவடிக்கை இடம்பெறயிருந்தது.

பெருநாள் விடுமுறையுடன் குறித்த 15, 16 ஆம் திகதிகளில் தூர இடங்களில் உள்ள ஆசிரியர்கள் விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுபர். மேலும் மாணவர்களின் பாடசாலை வரவும் மிகவும் குறைந்து காணப்படுவததற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக ஒகஸ்ட் 15, 16 ஆம் ஆகிய குறித்த இரு நாட்களையும் விடுமுறை தினமாக ஆக்கித் தருமாறு தூர இடங்களிலுள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் அமைச்சர் ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதேவேளை விசேடமாக ஒகஸ்ட் 15, 16 ஆம் திகதிகளில் வழங்கப்படும் விடுமுறை எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் சனிக்கிழமை நாட்களான 24, 31 ஆம் திகதிகளில் பாடசாலை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் மேலும் தெரிவித்துள்ளது.

இக்பால் அலி

Author: verified_user

0 comments: