Thursday, 1 August 2019

ஹஜ் அவசரகால உதவிக்கு 5 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள்!

நடப்பு ஹஜ் கிரிகைகளின் போது ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான போதிய சுகாதார, மருத்துவ முன்னேற்பாடுகளை செய்துள்ளது என்றபோதும் சவுதி செம்பிறைச் சங்கமும் தன் பங்கிற்கு மருத்துவ உதவி மையங்களை வழமைபோல் அமைத்து உதவி வருகின்றது.

இந்நிலையில், இவ்வருட ஹஜ் காலத்தின் அவசரகால உதவிகளுக்காக சவுதி செம்பிறை சங்கம் சார்பில், 5 புத்தம் புதிய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களை மக்கா, மதினா, ஹரம் ஷரீஃப், மினா, முஜ்தலிபா மற்றும் அரபாத் ஆகிய பகுதிகளில் ஈடுபடுத்தவுள்ளது.

மேலும், 2,700 மருத்துவக் குழுவினர், 370 மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 36 நிரந்தரம் மற்றும் 89 தற்காலிக மருத்துவ முகாம்களையும் அமைத்து அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சேவையாற்றி வருகின்றது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: