Tuesday, 30 July 2019

வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் சடலங்களாக மீட்பு! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர்களே வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தாய் விஷ்னுகாந்தி வள்ளியம்மை 70 வயதானவர் எனவும், அவரது மகன் விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் 34 வயதானவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சடலங்களை நீதவான் பார்வையிட்டுள்ளார். அத்துடன் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Author: verified_user

0 comments: