Thursday, 11 July 2019

இலங்கையர்களை அதிகமாக ஈர்க்கும் கத்தார் - முதல் 6 மாதத்தில் 16.000 பேர் கத்தாருக்கு!

2019ம் ஆண்டு முதல் 6 மாத காலப்பகுதிக்குள் 95,908 பேர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் இதில் 56,526 பேர் ஆண்களென்றும் இவர்களுள் 16, 626 பேர் கத்தாருக்கு பயணமாகியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 39,382 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனரென்றும் இதில் அதிகமாக, 14,948 பேர் குவைட்டுக்குச் சென்றுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: