Wednesday, 17 July 2019

திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விவாகரத்து கேட்டதால் அதிர்ந்து போன மனைவி

இந்தியாவில் வரதட்சணை கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை, மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஹாஹே அலாம். இவருக்கும் ருக்சானா பனோ என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 13ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணத்திற்காக கொடுத்த வரதட்சனையில் இருசக்கர வாகனம் இல்லை என கூறி ருக்சானா பனோவிடம் 3 முறை தலாக் கூறியுள்ளார் சஹாஹே அலாம்.

திருமணமான 24 மணி நேரத்தில் அலாம் மனைவியிடம் விவகாரத்து கேட்டது அவரையும், குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து ருக்சானாவின் தந்தை அலாம் மற்றும் அவர் அவர் வீட்டாருக்கு எதிராக வரதட்சனை கொடுமை சட்டத்தின் கீழ் பொலிசில் புகார் கொடுத்தார்.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Author: verified_user

0 comments: