Wednesday, 31 July 2019

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கான எரிபொருள் விலையை அதிகரித்தது கத்தார் அரசு!

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கான எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில் ஜுலை மாதம் 1.70 றியால்களாக விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெற்றோல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.80 றியால்களாகவும், மற்றும் 1.75 றியால்களாக விற்கப்பட்டு வந்த சூபர் பெற்றோல் 15 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.90 றியால்களாகவும் விற்கப்பட இருக்கின்றன. அதேபோன்று, 1.85 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் 5 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.90 றியால்களாகவும் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: