Wednesday, 31 July 2019

ஹஜ் கடமைக்காக சவூதிக்கு வந்துள்ள 130 வயதான ஹாஜிக்கு விஷேட வரவேற்பு ..

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா வந்துள்ள இஸ்லாமியர்களில் மிக வயது கூடிய ஹாஜி இன்று கிங் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தின் ஊடாக மக்கா நகருக்கு வந்தடைந்தார்.

இந்தோனேசிய நாட்டவரான இதுரோஸ் ஷம்ரி என்ற 130 வயதான ஹாஜியே இன்று மக்கா வந்தடைந்தார்.

அவருக்கு சவுதி அரேபிய அதிகாரிகள் விஷேட வரவேற்பு அளித்துள்ளனர்.இதுவரை ஹஜ் கடமைக்காக வந்த ஹாஜிகளில் மிகவும் வயது கூடியவர் இவர் என கூறப்படுகிறது.

Author: verified_user

0 comments: