Thursday, 27 June 2019

ஸ்ரீ லங்கள் விமானங்களுக்கு சவூதியில் எரிபொருள் விநியோகம் – அமைச்சரவை அங்கீகாரம்

ஸ்ரீ லங்கள் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்களுக்கு சவூதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்தில் எரிபொருளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜீலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சவூதி அரேபியாவில் தமாம் விமான நிலையத்தில், விமான எரிபொருளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 2.0 மில்லியன் டொலர்களாகும்.

இதனைத M/s. Modern Consortium for Refueling Aircraft Co.Ltd (MCRA) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: