Sunday, 2 June 2019

கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

புனித ரமழான் மாதம் நிறைவடைந்து நோன்புப் பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருனத்தில் கத்தார் ஹமத் வைத்தியசாலையின் காயங்கள் தடுப்புப் பிரிவு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது வாகன ஓட்டுநர்கள், பயணிகள், மற்றும் பாதைசாரிகள் உட்பட அனைவரும் வீதி ஒழுங்குகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெருநாள் விடுமுறை தினங்களில் பாதைகளை அனைவரும் அதிகம் பயன்படுத்துவதனால் நெரிசல் ஏற்பட்டு வீதி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதனால் மிக அவதானதாக செயற்படுமாறு ஹமத் வைத்திய சாலை காயங்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி ஹமத் வைத்தியசாலை அதிகாரி Dr Aisha Fathi Abeid அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, ”வாகன விபத்துக்கள் ஏற்பட மிக முக்கியமான காரணம் சரியான முறையில் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாமைதான். அத்துடன் வாகனம் செலுத்தும் போது செல்போன்களைப் பயன்படுத்துவதுமாகும்.  ஆகவே வாகன சாரதிகள் வீதி ஒழுங்குகளை பின்பற்றுவதிலும், வாகனம் செலுத்தும் போது மொபைல் போன்களைப் பாவிப்பதிலிருந்து தவிர்ந்திருப்பதாலும் பெரும்பாலான விபத்துக்களைத் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளா். 

அத்துடன் வாகன ஓட்டுநர்கள், மற்றும் முன்புற இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இருவரும் சீட்பெல்ட்களை கட்டாயம் அணிந்து கொள்ளும்படியும், தங்களுக்குத் தேவையான பொருட்களை கடைசி நேரம் வரை கொள்வனவுக்காக காத்திருக்காமல் விரைவாக நிறைவு செய்து கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேற்படி அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத வாகன ஓட்டுநர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: