Saturday, 15 June 2019

கத்தாரில் நான்கு பைகளில் போலி நாணயங்களுடன் 7 பேர் அதிரடிக் கைது! (படங்கள்)

கத்தார், உள்துறை அமைச்சின் குற்ற விசாரணைப் பிரிவினர் 7 வெளிநாட்டவர்களை 4 பை போலி நாணயங்களுடன் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 7 பேரில் 6 பேர் அரபு நாட்டவர்கள் என்பதாகவும், ஒருவர் ஐரோப்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேற்படி கைது செய்யப்பட்டகளிடமிருந்து போலி நாணய தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்ட சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Author: verified_user

0 comments: