Saturday, 15 June 2019

கத்தாரில் வெப்பம் 47 முதல் 50 டிகிரியாக அதிகரித்துள்ளதால் கத்தார் அரசின் பொது அறிவித்தல்

கத்தாரில் வெயிலின் கடுமை உக்கிரம் அடையும் நிலை உள்ளதால் கத்தார் பொதுநல பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கையாக சில முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விடயங்களை அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.
  • செண்ட் பாட்டில்கள், கேஸ் தொடர்புடைய பொருள்கள், பேட்டரிகள், பெப்சி போன்ற பானங்கள், லைட்டர்கள் போன்றவற்றை வாகணங்களுக்குள் வைக்க வேண்டாம்.
  • வாகணங்களை நிறுத்தும் பொழுதும் பயணிக்கும் பொழுதும் கதவுக் கண்ணாடிகளை சற்றே இறக்கி வைத்து செல்லவும்.
  • உச்சி மதிய வேளைகளில் பெட்ரோலை நிரப்பாது, மாலை வேளைகளில் நிரப்பவும்.
  • பெட்ரோலை முழுமையாக டாங்குகளில் நிரப்ப வேண்டாம்.
  • டயர்களில் காற்றை அதிகமாக நிரப்ப வேண்டாம்
  • பாம்பு மற்றும் தேள் போன்ற விச சந்துக்கள் கோடையில் அதிகம் வெளிவரும் என்பதால் கவணமாக எல்லா இடங்களிலும் இருக்கவும்.
  • அதிகமான தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளவும்.
  • வாட்டர் ஹீட்டர்களை அமர்த்தி வைக்கவும்.
  • கேஸ் சிலிண்டர்களை வெயிலில் வைக்க வேண்டாம்.
  • தேவையான அளவிற்கு மட்டும் மின்சாரத்தை பயன்படுத்தி, மீட்டருக்கு அதிக பளுவை கொடுக்க வேண்டாம்.
  • குறிப்பாக 10 முதல் 3 மணி வரை நேரடி வெயிலில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளவும்.
  • பால்கனி, சன்னல்களில் கோப்பைகளில் தண்ணீர் வைத்து, பூனைகள், பறவைகள் நீர் அருந்த உதவவும்.

Author: verified_user

0 comments: