Sunday, 19 May 2019

சிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்கள் பெரும் சிக்கலில்!

நாங்கள் மாணவர்களா? தீவிரவாதிகளா? மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம்?

பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும் முஸ்லிம் மாணவர்கள் பற்றி எவரேனும் சிந்திப்பீர்களாக இருந்தால் இது உங்களுக்கான பதிவு.

இன்றைய காலம் முஸ்லிம்களாகிய நமக்கு எவ்வளவு கசப்பானதும் பல எச்சரிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நம் நாட்டில் பல பல்கலைகழகங்கள், அரச மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அமைந்திருப்பது பெரும்பாண்மை மக்கள்கள் அதிகம் வாழும் இடங்களிலேயே ஆகும். அதனால் அங்கு தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விடுதிகளிலும் அயலில் உள்ள வாடகை வீடுகளிலுமேயே தங்கி தனது படிப்பை தொடர்கிறார்கள்.

ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளுக்கு அமைய பேரினவாத ஊர்களுக்கு கல்விக்காகவும் வியாபாரத்திற்காகவும் செல்பவர்களை தீவிரவாதிகளாகவும், கடும்போக்கானவர்களாகவுமே அவர்களது பார்வை வரவேற்கிறது.

இப்படி இருக்க அங்கு தனது வாழ்கைக்காகவும் சமூகத்திற்காகவும் செல்லும் எங்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் எந்தளவு பாதுகாப்பு தரப்படுகிறது என்பதை எவறேனும் எண்ணிப்பார்தீர்களா?

முஸ்லிம்களாகிய நாங்கள் அதிகம் தங்கி இருப்பது பெறும்பாண்மை மக்களது வாடகை வீடுகளிலே ஆகும்.

ஆனால் எங்களை கண்கலங்க வைத்தவிடயம்

"இனிமேல் இங்கு நீங்கள் தங்குவதற்கு இடமளிக்க முடியாது பாதுகாப்பு பரிசோதணை எனும் பெயரில் அடிக்கடி இராணுவம் வந்து செல்கிறது அதனால் நீங்கள் வேறு இடம் தேடிக்கொள்ளுங்கள்" என்ற பதில் மாத்திரமே பல வாடகை வீட்டு சொந்தக்காரர்களது பதிலாக இருக்கிறது.

அயலில் வசிப்பவர்களே இப்படி முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமாக தங்கி இருக்கிறார்கள் என்னவென்று சோதணை செய்யுங்கள் என இராணுவத்தினருக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

இப்படி எங்களது சூழ்நிலை இருக்க நாங்கள் எங்குதான் செல்வது?

ஆண்களாகிய எங்களது நிலையையே இப்படி என்றால் பெண்பிள்ளைகளது நிலைமை?

தூங்குவதற்கு கூட இடம் இல்லை எனும் போது எப்படி எங்களால் நிம்மதியாக கல்வியில் முழுகவனத்தையும் செலுத்த முடியும்?

இதற்கு தீர்வுதான் என்ன?

இப்பதிவினை எத்தனையோ அரசியல்வாதிகள், புத்தி ஜுவிகள் ,கல்விமான்கள், நலன் விரும்பிகள் வாசிப்பீர்கள் என்று தெரியாது.

ஆனால் இந்த தகவல் அவர்களை அடையும் வரை தயவுசெய்து பகிருங்கள். எங்களது உரிமைக்காக குரல்கொடுக்க தயவு செய்து உதவுங்கள்.

இது சாதாரண விடயம் கிடையாது அடுத்த தலைமுறையினது கல்வியை கேள்விக்குரியாக்கும் செயல்.

நன்றி 

நான் றிபான் ( Rifaan Muhammad ) 

University of Vocational Technology.

Author: verified_user

0 comments: