Sunday, 12 May 2019

கத்தாரிலிருந்து இலங்கைக்கு விடுமுறை செல்கிறீர்களா! கட்டாயம் இதனை வாசியுங்கள்

1. உங்கள் பொதிகளை சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு பொதி செய்து கொள்ளவும், அத்தோடு அவசியமற்ற பொருட்களை எடுத்துச்செல்வதை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளவும்.

2. பிறரிடமிருந்து பொதிகளை பெறுவதாயின், பொதிகளை முறையாக பரிசோதிக்காமல் பெற வேண்டாம்.

3. விமான நிலையத்தில் தேவையான அளவு உதவி கருமபீடங்கள் உள்ளன. ஆகவே அறிமுகமில்லாதவர்களுக்கு உதவி செய்வதை தவிர்த்துக்கொள்ளவும்.

4. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு, தற்போதைய நிலைமைகளுக்கு பொருத்தமில்லாத படங்கள், விடியோக்கள், வொய்ஸ் ரெகார்ட்கள் உங்கள் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் இருப்பின் அவற்றை முற்றாக அழித்து விடவும்.

5. பிரயாணத்துக்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களும் உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

6. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலகுவாக பரிசோதிக்கக் கூடியவாறு உங்கள் பொதிகளை பொதி செய்து கொள்ளவும்.

7. பெண்கள், அவசரகால சட்டத்தைப் பேணி உடை அணிந்து செல்வது பல அசௌகரியங்களை தவிர்க்கும்.

8. விமான நிலையத்திலோ அல்லது பொது இடங்களிலோ அதிக நேரம் காத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

9. விமான மற்றும் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை பேணி அதற்கு ஒத்துழைக்கவும்.

உங்கள் பிரயாணம் மற்றும் விடுமுறை சிறப்பாக அமைய எமது  பிரார்த்தனைகள்

நன்றி - CDF AWARENESS

Author: verified_user

0 comments: