Friday, 17 May 2019

வெசாக் தினத்தையொட்டி இம்முறை 762 கைதிகளுக்கு விடுதலை!

ஜனாதிபதியுடைய பொது மன்னிப்பின் கீழ் இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு சிறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

விடுவிக்கப்படவுள்ளவர்களில், 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் கூறப்படுகின்றது.

Author: verified_user

0 comments: