Monday, 15 April 2019

கத்தாரில் டோஹா to அல்கோர் ஐந்து லேன் கொண்ட பிரமாண்ட பாதை திறந்து வைப்பு!

2022ம் ஆண்டு கத்தாரில் உலகக் கிண்ண கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் கத்தார் பெருந்தொருக்களை நாடு முழுதும் அமைத்து வருகின்றது. பெரும்பாலான பாதைகள் 5 வழிச்சாலைகளாக  காணப்படுகின்றது. அந்த வரிசையில் இன்று (15.04.2019) கத்தாரின் தலைநகரான டோஹாவையும், அல்கோர் நகரையும் இணைக்கும் 5 வழிச்சாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் கத்தாரின் பிரதம மந்திரி அஷ்ஷெய்க் அப்துல்லா பின் நாசர் பின் கலீபா அல் தானி அவர்கள் கலந்து கொண்டார்கள். 33 கீலோ மீற்றர்கள் நீளம் கொண்ட இந்தப் பாதை பொது வேலைகள் அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவணைக்கு இன்று விடப்பட்டுள்ளது. இதன்படி கத்தாரின் டோஹா நகரிலிருந்து அல்கோர் நகரிற்கு 20 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்பதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022ம் ஆண்டு நடைபெற உள்ள கால்ப்பந்து கிண்ணத்தின் முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ள ”அல்பைத்” விளையாட்டரங்கு அல்கோர் நகரத்தில் அமையப்பெற்றுள்ளதால் போக்குவரத்தை துரிதப்படுத்தும் இதுபோன்ற 5 வழிச்சாலை காலத்தின் தேவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Author: verified_user

0 comments: