Sunday, 21 April 2019

சகல பயணிகளுக்கும் சிறிலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இலங்கைப் பயணிகள் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்ட நேரத்திலும் விமான நிலையத்திற்கு வருகைதரமுடியும் என்று சிறிலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ள சிறிலங்கன் விமான நிறுவனம் பயணிகள் இதுதொடர்பில் சில முக்கிய விடயங்களை கவனத்திற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி விமானத்தின்வழி பயணிக்கவுள்ளோர் தமது விமானப் பயணச் சீட்டுக்கள், கடவுச் சீட்டுக்கள் ஆகியவற்றை எந்தவொரு பாதுகாப்புத் தரப்பினருக்கும் காண்பித்து விமான நிலையத்திற்கு வருகைதரமுடியும் என்று அறிவித்துள்ளது.

மேலும் சகல பயணிகளும் தமது பறப்பிற்கு முன்னதாக நான்கு மணி நேரத்திற்கு முதல் விமான நிலையத்தை வந்தடையவேண்டும் என்றும் சிறிலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலதிக விடயங்கள் குறித்த தகவல்களுக்கு 094197331979 எனும் எண்ணைத் தொடர்புகொள்வதன்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

Author: verified_user

0 comments: