Tuesday, 23 April 2019

இலங்கையர்களுக்கு கத்தார் வீசா சென்டர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் அமைந்துள்ள கத்தாருக்கான வீசா நிலையம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ராஜகிரியவில் அமைந்துள்ள கத்தார் வீசா நிலையம் நாளை (24.04.2019)ம் திகதி மூடப்பட்டிருக்கும் என்பதாக அறிவிக்கப்பட்டள்ளது. 

கடந்த 21.04.2019ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி வீசா நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 25ம் திகதி வழமைக்கு திரும்பும் என்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: