Thursday, 14 March 2019

சூடானுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்துகிறது கத்தார் எயார்வெய்ஸ்!

உலகின் முன்னனி விமானச் சேவையான கத்தார் எயார்வெய்ஸ் சூடான் நாட்டிற்கான அனைத்து விமானச் சேவைகளையும் இரத்து செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் (மார்ச்) இறுதி முதல் இந்த நடைமுறை அமூலுக்கு வரும் என்பதாக கத்தார் எயார்வெய்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நிதி தொடர்பான சில காரணங்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் திகதி முதல்அமூலாகும் இந்த நடைமுறை மறுஅறிவித்தல் வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் Khartoum நகருக்கு செல்ல டிக்கட் புக்கிங்களை செய்தவர்கள் +974 4023 0000 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: