Tuesday, 12 March 2019

முற்று முழுதாக பெண்களால் இயக்கப்பட்ட கத்தார் எயார்வெய்ஸ் விமானம்!

முற்றுமுழுதாக பெண் ஊழியர்களால் இயக்கப்பட்ட கத்தார் எயார்ஸ் விமானம் கடந்த 10 திகதி பெல்ஜியம் நாட்டிலிருந்து கத்தாரின் டோஹா நகரை வந்தடைந்துள்ளது. இந்த விமானத்தில் விமானி உட்பட அனைத்து பணியாளர்களும் பெண்கள் என்பதே சிறப்பம்சமாகும். இந்தக் குழுமத்தில் 15 பெண் பணியாளர்கள் இருந்ததாக கத்தார் எயார்வெய்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
Airbus A350 ரக விமானம் புரஸ்ஸில் நகரிலிருந்து டோஹாவை நோக்கி பறந்த விமானத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குதல் என்ற அடிப்படை International Air Transport Association (IATA)வுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கத்தார் எயார்வெய்ஸ் விமானங்களில் பெண்கள் பணியாற்றுவது இது முதல் தடவையல்ல. என்றாலும் முற்றுமுழுதாக 100 விழுக்காடு பெண்களால் இயக்கப்பட்ட கத்தார் விமானம் என்பதே சிறப்பம்சமாகும்.


Author: verified_user

0 comments: