Thursday, 28 March 2019

வெளிநாடுகளுக்கான பால் பொருட்கள் ஏற்றுமதியை ஆரம்பித்தது கத்தார்! - வாழ்த்துக்கள்

கத்தார் - சவுதிக் கூட்டணி நாடுகளின் முறுகல் ஏற்பட்டு 20 மாதங்களுக்குள் வெளிநாடுகளுக்கு பால் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கத்தார் முன்னேரியுள்ளது. கத்தாரின் பால் உற்பத்தி நிறுவனமான Baladna Food Industries ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான ஏற்றுமதியை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் பால் உற்பத்திப் பொருட்களை சவுதி மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து கத்தார் 98% இறக்குமதி செய்து கொண்டிருந்தது. 

கத்தார் - சவுதிக் கூட்டணி நாடுகளின் முறுகல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கத்தார் பால் உற்பத்தியை மையமாகக் கொண்டு பால்ப்பண்ணையை ஆரம்பித்தது. ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 50 தொன்கள் மட்டும் உற்பத்தி செய்த நிறுவனம் தற்போது நாள் ஒன்று 500 தொன்கள் வரையான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது. 

கத்தாரின் சனத்தொகையான 26 இலட்சம் மக்களும் தேவையான பால் உற்பத்திப் பொருட்களை வெறும் 20 மாதங்களில் உற்பத்தி செய்தது மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கத்தார் பாலைவன பூமி முன்னேரியுள்ளது என்றால் பாராட்டாமல் இருக்க முடியாது..

Author: verified_user

0 comments: