Tuesday, 26 March 2019

கத்தார் - லுசைல் நகரில் 275,000 சதுர மீட்டர் பரப்பிலான புதிய பூங்கா திறந்து வைப்பு! (படங்கள்)

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்கள் Crescent Park என்ற பெயரில் புதிய பூங்காவை இன்று (26.03.2019) லுசைல் நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார். இந்தப் பூங்கா 275,000 சதுர மீற்றர்கள் பரப்பளவில் பாலைவனப் பூமியில் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்தப் பூங்காவில் பல்வேறு வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானங்கள், தண்ணீர் விளையாட்டுக்கான வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, நீர்ப்பாதைகள், சைக்கிள் பாதைகள், நடைபாதைகளோடு நிழல் பெறும் இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சிறுவர்களுக்கான தனிப்பட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கால்ப்பந்து, இரண்டு கூடைப்பந்து மைதானங்கள், இரண்டு கடல் கரப்பந்து மைதானங்கள், டென்னில் விளையாட்டுக்கான 3 மைதானங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரிய இரண்டு உணவகங்களும், 530 வாகன தரிப்பிடங்களும், லுசைல் நகரின் ஏனைய இடங்களிலிருந்து பூங்காவிற்கு செல்ல டிராம் (tram system) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கத்தாரின் 2030 தேசிய இலக்கை நோக்கிய பயணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பசுமைப் புரட்சித்திட்டம் தான் இந்த ”Crescent Park” எனலாம்.


Author: verified_user

0 comments: