Monday, 11 March 2019

குவைத்திலிருந்து 26 பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்துக்கு தொழில் வாய்ப்புக்காக சென்று பல்வேறு சித்தரவதைகளை அனுபவித்த 28 இலங்கை பணியாளர்கள் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களுள் 26 பேர் பெண்கள் அடங்கியுள்ளனர். யு எல் 230 என்ற விமானத்தின் மூலம் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (வேலைளத்தளம்)

Author: verified_user

0 comments: