Tuesday, 19 February 2019

கத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்!

Q-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைகளின் வேலைத் திட்டங்களும் பூர்த்தியடைந்ததும் சாலை கட்டண வாயில்கள் செயல்படுத்தப்பட ஆரம்பமாகும் என போக்குவரத்துப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்துத்தெரிவித்தார்.

Al Sharq அரபு தினசரிக்கு கருத்து தெரிவித்த GDT இன் இயக்குனர் பிரிகேடியர் முகமது சாத் அல் கர்ஜி: நெடுஞ்சாலைகளில் கட்டண வாயில்கள் செயல்படுத்தப்படுவது அனைத்து இணை சாலைகளின் வேலைத் திட்டங்களும் பூர்த்தியடைந்தும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் ஆரம்பமாகும் எனத்தெரிவித்தார்.

QGates, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

வாயில்கள் மூலம் அறவிடப்படும் கட்டணம் பற்றி தற்போது எந்தத்தகவலும் இல்லை என்றும், அவர் அல் ஷர்க் பத்திரிகைக்கு கூறினார்.

"அனைத்து இணை சாலைகளும் பயன்படுத்த தயாராக இருக்கும் போது Q-Gate வாயில்கள் செயல்பட ஆரம்பிக்கும்" என்று அவர் கூறினார்.

"இந்த வாயில்களின் நோக்கம் பெப்ரவரி22 போன்ற சாலைகளில் போக்குவரத்து நெருக்குதலைக் குறைப்பதாகும், இதன் மூலம் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கலாம்" என்றும் அவர் கூறினார்.

வாகனத்தின் முன்கண்ணாடியில் ஒட்டப்படும் ரிச்சார்ஜ் கார்டின் மூலம் இப்பாதையை உபயோகிப்பதற்கான கட்டணம் அறவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🇱🇰CDF©️🇶🇦ANNOUNCEMENT

Author: verified_user

0 comments: