Monday, 4 February 2019

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Author: verified_user

0 comments: