Friday, 8 February 2019

குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு 750 குற்றவாளிகளுக்கு விடுதலை - மன்னர் அதிரடி!

குவைத்தில் வரும் பிப்ரவரி 25 மற்றும் 26 தேசிய தினம் மற்றும் விடுதலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு குவைத் மன்னர் இந்த வருடம் பல்வேறு குற்றங்களில் பல வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றங்களில் அவர்கள் நன்னடத்தை அடிப்படையில் 750 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை வழங்க மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில் குவைத் பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினர் அடங்குவார்கள்.மேலும் 500 குற்றவாளிகள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் மீதமுள்ள குற்றவாளிகள் தேசிய தினத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்படுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அதிகாரபூர்வ செய்தி குவைத் இந்திய தூதரகத்திற்கு கிடைத்துள்ளது என்று தூதரக அதிகாரியாக பிபி நாராயணன் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதில் 253 பேர் இந்தியர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் குவைத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் வெவ்வேறான குற்றங்களில் 498 இந்தியர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 10 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அவர்கள். 

இதில் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு அவர் கொலை செய்த நபரின் குடும்பம் மன்னிப்பு வழங்கியதையடுத்து அவருடைய தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்களில் பெரும்பாலோர் போதைப் தொடர்பான குற்றங்களில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.மேலும் கடந்த 2018 மன்னர் 2800 குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது

Reporting by Kuwaittamilpasanga.

Author: verified_user

0 comments: