Thursday, 7 February 2019

கத்தாரின் மிக நீளமான பாதை (195 கிலோ மீற்றர்கள்) உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!

கத்தாரின் மிக நீளமான பாதை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கத்தாரின் பிரபல மிசெய்த் கடற்கரைலிருந்து ராஸ் லபான் வரையான 195 கிலோ மீற்றர் நீளம் கொண்ட பாதை கத்தாரின் மிக நீளமான பாதை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்தப் பாதைக்கு அல் மஜ்த் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாதை துக்கான் அதிவேக பாதை, சல்வா அதிவேக பாதை போன்ற முக்கிய பாதைகளை உடறுத்து செல்கின்றது. கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டுக்காக கட்டப்பட்டு வரும் முக்கிய கால்ப்பந்து மைதானங்கைளயும் இந்தப்பாதை கடந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Author: verified_user

0 comments: