Tuesday, 5 February 2019

1.5 கிலோ மீற்றர் நீளமான பரப்பில் கண்கவர் புதிய பூங்காவை திறந்தது கத்தார்! (படங்கள்)

பாலைவன மண்ணை சோலைவனமாக மாற்றி வருகிறது கத்தார் என்றால் அது மிகையல்ல என்ற அளவுக்கு கத்தார் பூங்காக்களை அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சில் உள்ள பொதுப் பூங்காக்கள் திணைக்களம், பொது வேலைகள் அதிகார சபையுடன் இணைந்து புதிய கண்கவர் பூங்கா ஒன்றை அண்மையில் திறந்து வைத்துள்ளது. இந்தப் பூங்கா அல்-ஹிலால் பகுதியில் அமைந்துள்ள கத்தார் ஷெரிட்டி மற்றும் The Mall என்பவற்றுக்கருகில் அமையப் பெற்றுள்ளது. 

50 மீற்றர் அகலமுடை, 1.5 கீலோ மீற்றர் நீளமுடைய இந்தப் பூங்கா 75 000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இது போன்ற பூங்காங்களை அமைப்பது கத்தார் வாழ் மக்களுக்கு பசுமையான வெளியில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குவதற்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் திறக்கப்பட்ட பூங்காவின் அழகிய படங்களை கீழே காணலாம்.



Author: verified_user

0 comments: