Wednesday, 16 January 2019

விலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட சர்வதேச ஊடகங்களும்...!

ரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். 

அவரின் இன்றய நிலை.

* அவர்தான் இன்று உலகின் பேசுபொருள். 

* BBC, CNN, Independence, Reuters, போன்ற பிரதான ஊடகங்களின் ஒரு கிழமை தலைப்புச் செய்தி அவர்தான்.

* அவரை பாதுகாக்கப் போகின்றோம் என்று UNO களத்தில் இறங்கியது.
* அவருக்கான அனைத்து தேவைகளும் செய்துகொடுக்கப்பட்டது.
* ஒரு கிழமையில் 300 ற்கும் மேற்பட்ட அவர் பற்றிய ட்விட்டர் பதிவுகள் உலக பிரதான தலைவர்களால் பதிவிடப்பட்டது.

* உடனே பல நாடுகள் அவருக்கு அடைக்கலம் கொடுக்க யோசிக்க ஆரம்பித்தது.

* கனடா முன் வந்தது. 
* அவர் இப்போது கனடாவின் புகலிடம் தேடியாக அரவணைக்கப் படுகிறார்.

* அங்கு அவருக்கு இராஜ மரியாதை.

அவர் பற்றி உலகப் புகழ் ஊடகங்கள் இவ்வாறுதான் செய்தி வெளியிட்டது. 

* ரஹப் பயப்படுகிறார்.
* ரஹப் உதவி தேடுகிறார்.
*ரஹப் அறையில் தூங்கிக்கொண்டு இருக்கின்றார்.
* ரஹப் வலது பக்கம் திரும்பிப் பார்த்தார்.
* ரஹப் விமானத்தில் ஏறினார்.
* ரஹப் கனடா செல்கிறார்.
* ரஹப் கனடாவை அடைந்தார்.

ரஹப் என்ற ஒரு சவூதி பெண்ணில் இந்த அளவு அக்கறை எடுத்த மேற்கத்தேய ஊடகம் இதே உலகில் அதே கிழமையில் நடந்தேறிய கொடுமைகளை வெளிப்படுத்தவே இல்லை. கடந்த 5 நாட்களுக்குள் இவைகளும் உலகில் நடந்தது.

* சிரியா அகதி முகாம்களில் சிறு பிள்ளைகள் அதீத குளிரால் உறைந்து போய் வெளிரிச் செத்தார்கள்.

* இன்னும் சில அகதி முகாம்களில் முழங்கால் அளவு நீர் பரவி மக்கள் சொல்லொண்ணா துயரை அனுபவித்தார்கள்.

* காசா மீது இஸ்ரேல் பல இடங்களில் குண்டு போட்டு பல கட்டிடங்களை அழித்தொழித்தது.

* இஸ்ரேல் ஒரு அப்பாவி பலஸ்தீன் பெண்ணை கொன்றது.

இப்படி மனிதாபிமானத்துக்கு முரணான எவ்வளவோ விடயங்கள் நடந்தேறியும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. 

காரணம் அவர்கள் முஸ்லிம்கள். 

இஸ்லாத்தை விமர்சிக்க பூதக்கண்ணாடி கொண்டு நிகழ்வு தேடும் இந்த ஊடக உலகத்துக்கு ரஹப் ஒரு வரம். அவரை வைத்து செய்கின்றார்கள்.

இனி என்ன 

* அவர் உலகப்புகழ் ஆவார்.
* சிறந்த பேச்சாளர் ஆவார்.
* இஸ்லாத்துக்கு எதிராக புத்தகம் வெளியிடுவார்.
* ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்படுவார்.
* Noble Peace Prize பெறுவார்.
* உலகின் ஜகன் ஆவார்.

வாழ்க உங்கள் ஊடக உலகம் !

- Rilmiyas Muhammad -

Author: verified_user

0 comments: