Thursday, 17 January 2019

கத்தாரில் கடும் தூசிக் காற்று, சுகாதார அமைச்சினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


கத்தாரில் தற்போது தூசிக்காற்று வீசிக் கொண்டிருக்கும் நிலையில் கத்தார் சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது கத்தார் வாழ் மக்கள் அனைவரும் தூசிக் காற்றிற்குள் செல்ல வேண்டாம் என்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள், முதியவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் வெளியில் வர வேண்டாம் என்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். 


நேற்றைய தினம் கடுமையான காற்று வீசக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்ட நிலையில் தற்போது கத்தாரில் தூசிக் காற்று வீசுவதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.



மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளையும், இதர பொருட்களை தூசி்க்காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் திறந்த வெளியான பகுதிகளுக்கு செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Author: verified_user

0 comments: