Friday, 18 January 2019

கத்தாரில் பேராபத்தை விளைவிக்கும் அரிய வகை எறும்பு கண்டு பிடிப்பு! மக்களே அவதானம்.

ஸம்ஸும் என அழைக்கப்படும் கோடை காலத்தில் அதிகமாக காணக்கூடியதாக உள்ள கறுப்பு நிற எறும்பு வகை கத்தாரில் காணப்படுவதாகவும் அவை கடித்தால் மரணத்திற்கே இட்டுச் செல்லக் கூடிய விஷத் தன்மையுடையவை எனவும் தகவல்கள் தெறிவிக்கின்றன

கறுப்பு நிறத்தையுடைய இவ்வெறும்புகள் அதிகமாக புட்தரைகளிலே காணப்படுவதோடு சில வீடுகளிலும் காணப்படும். இவ்வெறும்புக்கடிக்கு ஆளானால் உடனடியாக ஹமத் வைத்தியசாலையின் அவசர வைத்திய சேவை பிரிரிவிற்கு {999} சென்று உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.

இதன் அறிகுறிகள்

♦அரிப்பு மற்றும் சிவந்து காணப்படல் 
♦கடித்த இடங்கள் தடித்து காணப்படல் 
♦உதடு , முகம் தடித்தல் 
♦உயர் குருதி அமுக்கம் 
♦ஆஸ்த்துமா
♦நெஞ்சு வலி
♦அதிகரித்த இதயத்துடிப்பு

ஹமத் வைத்தியசாலையின் அறிக்கைப்படி இதுவரை கடந்த ஒரு வருடத்தில் 105 பேர் இவ்வெறும்புக் கடிக்கு ஆளாகி சிகிச்சைக்காக வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

👨‍💻 CWF-Qatar Awareness message 👨‍💻

Author: verified_user

0 comments: