Friday, 7 December 2018

UAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்

துபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம்

படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் விளையாட்டு வீரர்களை பிரதானதாக குறிவைத்து கடலில் 3 சூப்பர் மார்க்கெட்டுகளை திறந்துள்ளது மாஜித் அல் புத்தைம் வர்த்தக குழுமத்தை சேர்ந்த கேரிபோர் (Carrefour) நிறுவனம். ஆரம்பமாக துபையின் கைட் கடற்கரை (Kite Beach), ஜூமைரா பப்ளிக் கடற்கரை (Jumeirah Public Beach) மற்றும் அல் சுபோஹ் கடற்கரை (al Sufouh Beach) ஆகியவற்றின் அருகே தனது மிதக்கும் சூப்பர் மார்க்கெட் கடைகளை திறந்துள்ளது. 

'Sail Thru' Aqua Pod எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டுகளான இவை உலகிலேயே துபையில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சூப்பர் மார்க்கெட் படகு பிரதானமாக கடல்சார் பொருட்கள், சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் அவசரகால தேவைகளுக்கான உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

அருகாமையிலுள்ள பெரும் கப்பல்கள் மற்றும் படகுகளிலிருந்து தொலைபேசி 056 4003659 அல்லது Aqua Pod app என்ற ஆப் வழியாக பொருட்களை ஆர்டர் செய்தால் 45 நிமிட நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் ஏனைய கடல்சார் வாடிக்கையாளர்கள் அக்வா பாட் அருகே வந்து பேக் (Pack) செய்யப்பட்ட பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

இந்த மிதக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வழங்கப்படும் பேக்கிங் பொருட்கள் (Packing Items) மற்றும் ஸ்ட்ரா போன்றவை முழுமையாக மறுசுழற்சி செய்யத்தக்க பேப்பர் பொருட்களாகவே வழங்கப்படுவதுடன் மேலதிகமாக இந்த அக்வா பாட் கடலில் மிதக்கும் குப்பைகளை உறிஞ்சி எடுத்து சேகரித்து மறுசுழற்சிக்காக கரைக்கு கொண்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.It will also suck in floating waste via vacuums attached to the boat’s exterior, with the rubbish being disposed of and recycled once onshore.

குறிப்பு: ஏற்கனவே துபையில் மிதக்கும் உணவகம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றதும் கவனிக்கத்தக்கது.


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: