Sunday, 9 December 2018

இனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை! யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு

நாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ? அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை நாடலாம், முன்னர் போன்று NOC (No Objection Certificate) பெற்று 3 மாதங்களுக்குள் வேறு கம்பனிகளை நாடுவது என்ற நடைமுறை தற்போது இல்லை.

எனவே அவ்வாறான எண்ணத்தில் பல சுமைகளோடு வந்து இங்கு மீண்டும் ஏமாற்றம் அடையும் விடயங்களை தவிர்த்து கொள்ளவும் !

நாளாந்தம் நான் இங்கே சந்திக்கும் எமது நாட்டு சகோதரர்களின் துன்பங்களை நேரடியாக கண்டவன் என்ற முறையில் எனது ஆலோசணைகளை சொல்லியுள்ளேன், எனவே இதன் பின்னர் வரவுள்ளோர் இங்கேயுள்ள தொழில் மற்றும் அதன் மீதான புதிய சட்ட விடயங்களை நன்றாக அறிந்து கொண்ட பின்னர் உங்களது பயண விடயங்களை கையாளவும் !

மாறாக Free Visa வியாபாரிகள் சொல்வதை உண்மை என நம்பி உங்களையும் உங்களது பணத்தையும் எதிர் காலத்தையும் இங்குண்டான சீரழிவுகளையும் எதிர் கொண்டு வேதனைகளை அனுபவிக்காதீர்கள் .

முகநூல் பதிவு
நன்றி Mohamed Firthows

Author: verified_user

0 comments: