Friday, 7 December 2018

உம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்!

புனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விமான நிலையம் மக்காவை சுற்றி அமையவுள்ள 4-வது விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின 28-வது விமான நிலையமாக அமையவுள்ள அல் குன்புதா விமான நிலையம் 24 மில்லியன் சதுர மீட்டரில் அமையவுள்ளது. ஆரம்பமாக ஆண்டிற்கு சுமார் அரை மில்லியன் பயணிகளையும் மணிக்கு 5 விமானங்களையும் கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பயணிகள் லவுஞ்ச் 20,340 சதுர மீட்டரில் அமையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: